Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது முதலாவது டெஸ்ட்... பழிதீர்க்குமா இந்தியா?

    இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது முதலாவது டெஸ்ட்… பழிதீர்க்குமா இந்தியா?

    வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா விளையாடும் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலை 9 மணியளவில் தொடங்கவுள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரும், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரும் நடைபெறவுள்ளது. 

    இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வங்கதேச அணி கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து, இன்று காலை 9 மணியளவில் சிட்டகாங்கில் டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது. 

    மிர்பூரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியின் பீல்டிங்கின் போது, ரோஹித் சர்மா பெருவிரலில் காயம் ஏற்பட்டது. இதனால், வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்க மாட்டார் என்று முன்பே தெரிவிக்கப்பட்டது

    மேலும், இன்று நடைபெறவுள்ள முதலாவது டெஸ்ட்டில் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக கே.எல் ராகுல் அணிக்கு தலைமை தாங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் தொடரை இழந்ததை அடுத்து இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    வங்கதேச அணி வீரர்கள்: 

    நஜ்முல் ஹொசைன் சாண்டோ, மஹ்முதுல் ஹசன் ஜாய், மொமினுல் ஹக், அனாமுல் ஹக், ஷாகிப் அல் ஹசன்(கேப்டன்), லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், எபாடோட் ஹொசைன், கலீத் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், தஸ்கின் அஹ்மத் ஹசன், யாசிர் அலி, ஜாகிர் ஹசன், ரெஜவுர் ரஹ்மான் ராஜா

    இந்திய அணி வீரர்கள்:

    சுப்மன் கில், கே.எல். ராகுல் (கேப்டன்), புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ஸ்ரீகர் பாரத், ஜெய்தேவ் உனத்கட் , நவ்தீப் சைனி, அபிமன்யு ஈஸ்வரன், சௌரப் குமார்

    துணிவு திரைப்படத்தின் இரண்டாவது பாடல் இப்படித்தான் ஆரம்பிக்கிறதா… வெளிவந்த தகவல்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....