Wednesday, March 20, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்குழந்தை பெற்றெடுக்கும் தம்பதிக்கு ரூ.3 இலட்சம்... வெளிவந்த அதிரடி அறிவிப்பு!

    குழந்தை பெற்றெடுக்கும் தம்பதிக்கு ரூ.3 இலட்சம்… வெளிவந்த அதிரடி அறிவிப்பு!

    ஜப்பானில் குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு கூடுதலாக ரூ.48 ஆயிரம் வழங்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. 

    மக்கள் தொகைப் பெருக்கம் அதிகரித்து வருவதால் ‘நாம் இருவர் நமக்கு ஒருவர்’ , ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ போன்ற விழிப்புணர்வுகள் இந்திய நாட்டில் நடைபெற்று வருகின்றன. 

    அதேசமயம், தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் குழந்தை பிறப்பை அரசுகள் ஊக்குவித்து வருகிறது. குறிப்பாக ஜப்பானில் மக்கள் தொகைப் பெருக்கத்தை அதிகரிக்க அந்நாடு பல்வேறு சிறப்புத் திட்டங்களை வகுத்து வருகிறது. 

    அதனின் ஒரு பகுதியாக, ஜப்பானில் குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு கூடுதலாக ரூ.48,000 வழங்க அந்நாட்டு சுகாதாரம் மற்றும் தொழிலாளர் நலத் துறை முடிவெடுத்துள்ளது. 

    முன்னதாக,  குழந்தை பிறந்த பிறகு, தம்பதிக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.2,52,000 (4,20,000 யென்) வழங்கப்படுகிறது. தற்போதைய அறிவிப்பின்படி கூடுதலாக ரூ.48 ஆயிரம் வழங்க திட்டமிட்டுள்ளதால் மொத்தமாக ஜப்பானில் தம்பதியினர் பெற்றுக்கொள்ளும் ஒரு குழந்தைக்கு அரசு 3 இலட்சம் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும், இந்தத் திட்டம் 2023-ஆம் நிதியாண்டு முதல் அமல்படுத்த ஜப்பான் அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    ரவீந்திர ஜடேஜா பகிர்ந்த புகைப்படம்..’அழகிய தமிழ் மகன்’ என கூறிய சிஎஸ்கே..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....