Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுரவீந்திர ஜடேஜா பகிர்ந்த புகைப்படம்..'அழகிய தமிழ் மகன்' என கூறிய சிஎஸ்கே..

    ரவீந்திர ஜடேஜா பகிர்ந்த புகைப்படம்..’அழகிய தமிழ் மகன்’ என கூறிய சிஎஸ்கே..

    ரவீந்திர ஜடேஜா தனது சமூகவலைதள பக்கத்தில், பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, துண்டு அணிந்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 

    பிரபல இந்திய கிரிக்கெட் வீரர், ரவீந்திர ஜடேஜா. இந்தியாவின் சிறப்பான ஆல்-ரவுண்டர்களில் ஒருவராக இவர் திகழ்ந்து வருகிறார். காயம் காரணமாக தற்போது இந்திய – வங்கதேச சுற்றிலிருந்து விலகியுள்ளார். 

    இந்திய கிரிக்கெட்டராக அறியப்பட்டாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல்-லில் விளையாடியதன் மூலம் தமிழக ரசிகர்களை பெருமளவில் இவர் சம்பாதித்தார். தோனி, ரெய்னாவுக்கு அடுத்ததாக 150 ஆட்டங்களில் விளையாடிய 3-வது சிஎஸ்கே வீரர் என்கிற பெருமையை ஜடேஜா தன்னிடத்தில் வைத்துள்ளார். 

    மொத்தமாக, இவர் இந்திய அணிக்காக 60 டெஸ்டுகள், 171 ஒருநாள், 64 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். மேலும், 210 ஐபிஎல் ஆட்டங்களில் இவர் விளையாடியுள்ளார். கடந்த ஐபிஎல் போட்டியின் போதும் 2022 போட்டியில் சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார். ஆனால், தொடர் தோல்வி காரணமாக கேப்டன் பதவியிலிருந்து திடீரென விலகினார் ஜடேஜா. இதைத்தொடர்ந்து, கேப்டன் பொறுப்பை தோனி மீண்டும் ஏற்றுக்கொண்டார். 

    இந்நிலையில், ரவீந்திர ஜடேஜா தனது சமூகவலைதள பக்கத்தில், பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, துண்டு அணிந்து புதிய தோற்றத்துடன் உள்ள புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.

     அந்தப் பதிவில், தென்னிந்தியாவின் அடையாளத்தை உணர்கிறேன். தமிழ்க்காதல் என்ற ஹேஷ்டேக் மூலம் ட்வீட் செய்துள்ளார். மேலும், இந்த புகைப்படத்தை அழகிய தமிழ் மகன் எனக் குறிப்பிட்டு சிஎஸ்கே அணி பகிர்ந்துள்ளது.

    ஜல்லிக்கட்டு தொடர்பாக நிலவிய குழப்பம்… பதிலளித்துள்ள தமிழக அரசு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....