Thursday, March 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகர்நாடகாவில் 5 வயது சிறுமிக்கு உறுதி செய்யப்பட்ட ஜிகா வைரஸ்...

    கர்நாடகாவில் 5 வயது சிறுமிக்கு உறுதி செய்யப்பட்ட ஜிகா வைரஸ்…

    கர்நாடகாவைச் சேர்ந்த 5 வயது சிறுமி ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 5 வயதுடைய சிறுமி ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக புனே ஆய்வுக்கூடம் தகவல் அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைங்களை எடுக்க வேண்டும் என அம்மாநில சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    இதுகுறித்து கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர், கர்நாடக மாநிலத்தில் ஜிகா வைரஸ் இதுவே முதல் முறை உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த நிலைமையை அரசு தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூறினார். மேலும், ஜிகா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள தங்களின் துறை தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். 

    கடந்த மாதம் நவம்பர் 6 ஆம் தேதி நாசிக் பகுதியில் வசித்து வந்த 67 வயதுடைய நபர் ஒருவர் புனே வந்திருந்தார். அப்போது அவருக்கு நவம்பர் 16 ஆம் தேதி கடும் காய்ச்சல், இருமல், மூட்டு வலி, மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதில் ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. பிறகு அவருக்கு முறையான சிகிச்சை அழிக்கப்பட்டதால் குணமடைந்தார். 

    திமுக கட்சி இல்லை கார்ப்பரேட் கம்பெனி; விளாசித்தள்ளிய எடப்பாடி பழனிச்சாமி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....