Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்முதலைச்சர் ரங்கசாமி குறித்து ஸ்டாலின் பேசியது அரைவேக்காட்டுத்தனமான செயல்; அதிமுக அன்பழகன்

    முதலைச்சர் ரங்கசாமி குறித்து ஸ்டாலின் பேசியது அரைவேக்காட்டுத்தனமான செயல்; அதிமுக அன்பழகன்

    புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்றும், தமிழகத்தில் அறிவித்த திட்டங்களை செயல்படுத்தாமல் புதுச்சேரியில் நல்லாட்சி நடத்தி வரும் முதலமைச்சர் ரங்கசாமியை தரம் தாழ்ந்து விமர்சித்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் செயலை புதுச்சேரி அதிமுக வன்மையாக கண்டிப்பதாக அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன், புதுச்சேரிக்கு வந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை பற்றி பேசிய வார்த்தைகள் அனாகரிகமான அறுவறுக்கத்தக்க செயலாகும். எந்த ஒரு மாநில முதலமைச்சரும் பிற மாநிலத்திற்கு செல்லும் போது அந்த மாநில முதலமைச்சரை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்தது ஸ்டாலினின் தகுதிக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். தமிழ்நாடு என்பது ஒரு மாநிலம், பதுச்சேரி ஒரு யூனியன் பிரதேசம். இந்த மாநிலத்தின் துணைநிலை ஆளுநருடன் இணக்கமாக செயல்படுவது மாநில வளர்ச்சிக்கு உகந்ததாகும். அந்த வகையில் முதுலமைச்சர் மத்திய அரசிடமும், துணைநிலை அளுநரிடமும் இணக்கமாக செயல்படுகிறார். சட்டமன்றத்தில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் உடனுக்குடன் செயல்படுத்தி ஒரு நல்லாட்சி நடத்தி வருகிறார்.

    ரங்கசாமி ஆள்தான் உயர்ந்தவர் தகுதியில் துணைநிலை ஆளுநரிடம் அடிபணிந்து பொம்மை ஆட்சி நடத்தி வருகிறார். எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என தமிழக முதுலமைச்சர் பேசியது அறைவேக்காட்டு தனமான செயலாகும். சட்டமன்றத்தில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தியவர் முதலமைச்சர் ரங்கசாமி, முதியோர் பென்ஷன் 2,500 முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை வழங்குகிறார். ஆனால் தமிழகத்தில் 1000 ரூபாய் தான் வழங்குகிறீர்கள். குடும்ப பெண்களுக்க மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என கூறினீர்கள் இதுவரை வழங்கவல்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3000 வழங்கும் ஒரே அரசு புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் அரசு. எனவே எங்களின் அரசை பற்றியும், முதலமைச்சரை பற்றியும் தமிழக முதலமைச்சர் தரம் தாழ்ந்து விமர்சித்ததை புதுச்சேரி அதிமுக வன்மையாக கண்டிக்கிறது. துணைநிலை ஆளுநர் யார், அவரது அதிகாரம் என்ன என்பதை தமிழக முதலமைச்சர் தெரிந்துகொண்டு பேச வேண்டும்.

    ஆளுநரை பற்றி பேசினால் தான் இந்தியா முழுவதும் தெரிவார் என்பதால இப்படி பேசுகிறார். எதிர்கட்சி தலைவராக இருந்த போது சட்டையை கிழித்துக்கொண்டு ஆளுநரிடம் முறையிட்டவர் தான் இப்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின். ஆட்சியில் இருக்கும் போது ஒரு நிலைபாடு, ஆட்சியில் இல்லாத போது ஒரு நிலைபாடா?

    கடந்த கால காங்கிரஸ் திமுக ஆட்சிய புதுச்சேரி மாநிலத்திற்கான இருண்ட ஆட்சி. மாநில வளரச்சியை பின்னுக்கு தள்ளியது தான் கடந்த கால ஆட்சி. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா.

    திராவிட மாடல் ஆட்சி என்பது மக்களுக்கான ஆட்சி இல்லை. அவர்களின் குடும்ப ஆட்சி. குடும்ப நலனுக்கான ஆட்சி.

    புதுச்சேரியில் திமுக தலைமையில் ஆட்சி அமையும் என திமுக அமைப்பாளர் சிவா கூறியபோது கடுமையாக விமர்சித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் கூறும் போது அது அவர்களது விருப்பம் என நாராயணசாமி மழுப்பலாக கூறுகிறார். தன்னுடைய சுயநலத்திற்காக புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியை ஒட்டுமொத்தமாக திமுக ஸ்டாலினிடம் அடமானம் வைத்துவிட்டார். அவருடைய கருத்தை இப்போ உள்ள காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிக்கள் ஏற்றுக்கொண்டார்களா? புதுச்சேரி மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலில் திமுக நிற்கும் என்பதை காங்கிரஸ் கட்சியினர் ஏற்றுக்கொள்கிறார்களா?

    பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வரும் நாராயணசாமி இதுவரை அதற்கான ஆதாரத்துடன் நிரூபித்தாரா? வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசுவது தவறானது. நாராயணசாமியிடம் எந்த காலகட்டத்திலும் அரசியல் ரீதியான மரியாதையை எதிர்பார்க்க முடியாது. நாம் என்ன விதைக்கிறோமோ அதைதான் அறுவடை செய்வோம்.

    காலாப்பட்டில் உள்ள ரசாயன தொழிற்சலையில் ஏற்பட்ட விபத்தில் 2 தொழிலாளர்கள் மரணமடைந்துள்ளனர். இந்த நிகழ்வு அதிபயங்கரமான ஒரு விபத்தாகும். அந்த நிறுவனம் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடிய ரசாயானங்களை உற்பத்தி செய்கிறது.

    இந்த சம்பவம் முழுமையாக மூடி மறைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களுக்கு குறைந்த அளவில் இழப்பீடு வழங்கப்பட்டு பிரச்சனை மூடி மறைக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் சரியான உள்கட்டமைப்பு இல்லாத நிலையில் உயிரிழப்பு ஏற்பட்டால் உரிய இழப்பீடு வழங்கி அதை மூடி மறைப்பது சரியில்லை. மீண்டும் இதுபோன்ற சம்பவம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடிய ரசாயானம் தயார் செய்வதை கண்காணிக்கும் துறையினர் என்ன செய்கிறார்கள் என தெரியவில்லை. அந்த தொழிலாளர்கள் பயம் கலந்த பீதியுடன் பணி செய்யும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த பிரச்சனையில் துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் ஆகியோர் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை அந்த தொழிற்சாலைகயில் உற்பத்தியை நிறுத்தி வைக்க அரசு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விஜய்யின் அடுத்தப் படத்தில் நான் வில்லனா? – விஷால் சொன்ன விளக்கம்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....