Saturday, March 23, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர் இல்லை; டி.டி.வி தினகரன்

    எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர் இல்லை; டி.டி.வி தினகரன்

    எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர் இல்லை என அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார். 

    தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று தனது 60-வது பிறந்தநாளை அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கட்சி நிர்வாகிகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார். 

    அதன் பின்னர், டி.டி.வி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஓர் அணியில் இணைய வேண்டும் என்றார். மேலும், அப்படி இணைந்தால் தான் தேர்தலில் திமுகவை வீழ்த்த முடியும் என்றும் கூறினார். 

    தொடர்ந்து பேசிய டி.டி.வி தினகரன், எடப்பாடி பழனிசாமி  உண்மையான தொண்டர் இல்லை என்பதை பல இடங்களில் நிரூபித்து வருவதாக குற்றம் சாட்டினார். 

    உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் ஆக்குவதில் தவறு இல்லை என்றும் ஆனால், ஏன் இவ்வளவு அவசரத்தில் அமைச்சராக ஆக்க மு.க.ஸ்டாலின் நினைக்கிறார் என்பது தெரியவில்லை என்றும் தெரிவித்தார். 

    மேலும் டி.டி.வி தினகரன, புதுச்சேரியில் திமுக ஆட்சி அமைய வாய்ப்பில்லை என்பது எனது கருத்து என்றும் திமுக தேர்தலில் கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் அதற்கான பதில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

    துணிவு திரைப்படத்தின் இரண்டாவது பாடல் இப்படித்தான் ஆரம்பிக்கிறதா… வெளிவந்த தகவல்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....