Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரவிந்தர் ஆசிரமத்தில் இன்று 96-ம் ஆண்டு சித்தி தினம் கடைபிடிக்கப்பட்டது: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு...

    அரவிந்தர் ஆசிரமத்தில் இன்று 96-ம் ஆண்டு சித்தி தினம் கடைபிடிக்கப்பட்டது: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு…

    புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற அரவிந்தர் ஆசிரமம் நிறுவிய தினத்தை சித்தி தினமாக கடைபிடித்து ஏராளமான பக்தர்கள் ஆசிரமத்திற்குள் சென்று தியான வழிபாட்டில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரிக்கு புகழ் சேர்ப்பது இங்குள்ள மகான் அரவிந்தர் வாழ்ந்து மறைந்த இடம்.
    அந்த இடத்தை அரவிந்தர் ஆசிரமாக நிறுவி அரவிந்தர் இறைசக்தி பெற்ற மகானாக போற்றி அவரை தியானித்து வருகின்றனர்.

    மேலும் அரவிந்தர் யோகத்தின் மூலம் அதிமனம் என்ற மேல் மனத்தை பூமிக்குக் கொண்டு வந்து அதன் வெளிப்பாட்டை உலகம் உணரச் செய்தார். அவருடைய வாழ் வில் 1926 நவம்பர் 24ஆம் நாள் ஒரு முக்கிய தினமாகும். அந்த வகையில் அந்நாள் ஆசிரமம் நிறுவும் தினமாக அறியப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 24-ம் தேதி சித்தி தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி 96ம் ஆண்டு சித்தி தினம் இன்று அரவிந்தர் ஆசிரமத்தில் கடைபிடிக்கப்பட்டது. அந்தவகையில் நாடுமுழுவதும் உள்ள ஏராளமான பக்தர்கள் புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்திற்கு வந்து அவரது சமாதியில் கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர். மேலும் அரவிந்தர் வசித்த அறை இன்று திறக்கப்பட்டு பக்தர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    கார்த்திகை மாத சிறப்பு பூஜை: ஆற்று பகுதியில் தீபம் ஏற்றி விடிய விடிய வழிபாடு நடத்திய பக்தர்கள்….

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....