Thursday, March 21, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரிய வழக்கு; வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம்

    ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரிய வழக்கு; வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம்

    ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கக்‌ கோரிய வழக்கை வரும் 29-ம் தேதி உச்சநீதிமன்றம்‌ ஒத்திவைத்துள்ளது.

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின்போது நடத்தப்படும் கலாசார திருவிழாக்களில் ஒன்று ஜல்லிக்கட்டு. இப்படியான ஜல்லிக்கட்டுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை எதிர்த்து 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற ல்வேறு போராட்டங்களைத்‌ தொடர்ந்து குடியரசுத்‌ தலைவர்‌, தமிழக ஆளுநரின்‌ ஒப்புதலுடன்‌ ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டம்‌ இயற்றப்பட்டது. அதன்படி, ஜல்லிக்கட்டு நடைபெற்றது. நடைபெற்று வருகிறது. 

    இந்தச் சூழலில், தற்போது பீட்டா, கூபா உள்ளிட்ட 15-க்கும்‌ மேற்பட்ட அமைப்புகள்‌ ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டுமென்றும்‌, காட்சிப்படுத்தப்பட்ட விலங்கினங்கள்‌ பட்டியலில்‌ காளைகள்‌ உள்ளன என்றும்‌ கூறி ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்சநீதின்றத்தில்‌ மனு தாக்கல்‌ செய்தனர்‌.

    இந்த மனுவானது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது பல்வேறு வாதங்கள் முன் வைக்கப்பட்டன. இதைக் கேட்ட நீதிபதிகள், ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை வருகிற 29-ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்கள். 

    என்னது எலி கஞ்சா சாப்பிட்டுச்சா? அப்ப 581 கிலோவும் அபேலா? நீதிபதிகளுக்கு ஷாக் கொடுத்த காவல்துறை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....