Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்கார்த்திகை மாத சிறப்பு பூஜை: ஆற்று பகுதியில் தீபம் ஏற்றி விடிய விடிய வழிபாடு நடத்திய...

    கார்த்திகை மாத சிறப்பு பூஜை: ஆற்று பகுதியில் தீபம் ஏற்றி விடிய விடிய வழிபாடு நடத்திய பக்தர்கள்….

    புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியத்தில் கார்த்திகை மாதத்தையொட்டி ஆற்று பகுதியில் தீபம் ஏற்றி விடிய விடிய வழிபாடு நடத்திய பக்தர்கள்.

    புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியம் ஆந்திர மாநில கோதாவரி ஆற்றையொட்டி இருக்கிறது. இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாத சிவபெருமானை வழிபட்டு சிறப்பு பூஜையை நடத்துவார்கள்.

    அந்த வகையில் இந்த ஆண்டு அங்குள்ள ராஜீவ் கடற்கரையில் கோதாவரி ஆற்று பகுதியில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் கூடி தீபம் ஏற்றி ஆற்றில் விட்டு வழிபட்டனர்.

    முன்னதாக ஏனாமில் உள்ள கிடிராஸ்வரர் கோயிலில் பூஜை செய்து 3 நாள் விரதம் இருந்த மக்கள் நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய தீபம் ஏற்றி சிவ பெருமானை வழிபட்டனர்.ஆண்டுதோறும் இவ்விழாவை மக்கள் சாதி-மத பேதமின்றி ஒரே இடத்தில் கூடி வழிபடுவது வழக்கம் என்பது குறிப்பிட தக்கது.

    கார்த்திகை தீபத் திருவிழா: திருவண்ணாமலைக்கு 2700 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை முடிவு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....