Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்கட்டுப்பாட்டை இழந்த டெஸ்லா...மூன்று உயிரை பலியாக்கிய அதிர்ச்சி சம்பவம் - அதிர்ச்சி வீடியோ

    கட்டுப்பாட்டை இழந்த டெஸ்லா…மூன்று உயிரை பலியாக்கிய அதிர்ச்சி சம்பவம் – அதிர்ச்சி வீடியோ

    டெஸ்லா கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அசுர வேகத்தில் சென்றதால், எதிரே வந்த வாகனங்களின் மீது மோதிய விபத்தில் 3 பேர் இறந்துள்ளனர்.

    உலகம் முழுவதும் பிரபலமான ஆட்டோமொபைல் நிறுவனம்தான், டெஸ்லா. மின்சாரத்தினால் இயங்கும் வாகனங்களை  மட்டுமே டெஸ்லா உருவாக்குகிறது. உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்தான் இந்த டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர். 

    டெஸ்லா கார்கள் குறித்து நாளுக்கு நாள் பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. பல நாடுகளில் டெஸ்லா கார்கள் தற்போது இயக்கத்தில் உள்ளன. குறிப்பாக சீனாவில் டெஸ்லா கார்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

    இந்நிலையில், சீனாவில் டெஸ்லா காரினால் நடைபெற்ற சம்பவம் ஒன்று காண்போரை திடுக்கிட வைத்துள்ளது. சீனாவின் குவாங்டாங்க மாகாணத்தில் நவம்பர் 5-ஆம் தேதி டெஸ்லா கார் ஒன்றை, அக்காரின் உரிமையாளர் சாலையோரம் நிறுத்த முயன்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதில் அந்த கார் ஏதிரே வந்த வாகனங்களின் மீது மோதியது. இதனால் சிறுமி உள்பட 2 பேர் கொல்லப்பட்டனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.

     இந்த விபத்து சார்பாக, வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்த முயன்றபோது வேகமெடுத்தது ஏன்? என்றும், காரில் தொழில்நுட்பக் கோளாறு இந்த விபத்துக்குக் காரணமா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், விசாரணைக்கு தாங்கள் முழு ஒத்துழைப்பையும் அளிக்கவுள்ளதாக டெஸ்லா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

    இதையும் படிங்க: உருவாகிறதா ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் இரண்டாம் பாகம்? – இயக்குநர் சொன்ன பதில்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....