Sunday, March 17, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புமீன்வளத்துறையில் இவ்வளவு காலிப்பணியிடங்களா? டிகிரி முடித்தவர்கள் விரைவில் விண்ணப்பியுங்கள்

    மீன்வளத்துறையில் இவ்வளவு காலிப்பணியிடங்களா? டிகிரி முடித்தவர்கள் விரைவில் விண்ணப்பியுங்கள்

    தமிழ்நாடு அரசின் மீன்வளத்துறையில் 433 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசின் மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில்  சாகர் மித்ரா பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 22.08.2022-க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

    அதன்படி, மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 433 ஆக இருக்கிறது. இந்தக் காலிப்பணியிடங்ளுக்கு விண்ணப்பிக்க மீன்வள அறிவியல், கடல் உயிரியியல், விலங்கியல், வேதியியல், தாவரவியல், நுண்ணுயிரியல், இயற்பியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் இளங்கலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

    மேலும், இந்தக் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு 35 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு மாத ஊதியமாக ரூ.15,000 அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த பணியிடங்களுக்கு நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 8-ம் தேதி கடைசி நாளாகும். 

    இது குறித்து மேலும் தகவல்கள் அறிய, கீழ்காணும் இணைப்பை க்ளிக் செய்யவும். https://www.fisheries.tn.gov.in/includes/assets/cms_uploads/pdf/latestnews/Sagar_Mitra_Notification.pdf

    ரெப்போ வட்டியை அதிகரித்த ரிசர்வ் வங்கி; அதிகரிக்கப் போகிறதா தனிநபர் வட்டி?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....