Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்இஸ்லாமாபாத்தை 'டார்கெட்' செய்யும் தலிபான்கள்; பாகிஸ்தானுக்கு பகிரங்க எச்சரிக்கை

    இஸ்லாமாபாத்தை ‘டார்கெட்’ செய்யும் தலிபான்கள்; பாகிஸ்தானுக்கு பகிரங்க எச்சரிக்கை

    “ஒவ்வொரு ஆப்கானிஸ்தானியரும் பாகிஸ்தானை வெறுக்கிறோம்; ஆயிரக்கணக்கான தற்கொலைப்படை மூலமாக பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தி, இஸ்லாமாபாத்தை எங்களது இரண்டாவது தலைநகராக மாற்றுவோம்” என பாகிஸ்தானுக்கு தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானிலிருந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்க படைகள் வெளியேறின. இதையடுத்து, தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். தலிபான்கள் ஆட்சி வந்த பிறகு, கடந்த ஓராண்டாக பல்வேறு வன்முறைச் சம்பவங்களும் நடந்து வருகின்றன.

    இந்நிலையில் பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கு இடையே எல்லை பிரச்னைகள், பயங்கரவாதம் தொடர்பாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இவ்வாறாக பாகிஸ்தான் தொடர்ந்து பதற்றத்தை அதிகரித்தால், தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதாக தலிபான்கள் எச்சரித்துள்ளனர்.

    இதையும் படிங்க: 400 கோடியில் உருவாகி வரும் பிரமாண்ட பேருந்து நிலையம்! எப்போது திறக்கப்போகிறார்கள் தெரியுமா?

    இது தொடர்பாக தலிபான்கள் அதிகாரி அப்துல் பாசிர் ஷெர்சாடி, வெளியிட்ட காணொளியில் தெரிவித்துள்ளதாவது:

    ஒவ்வொரு ஆப்கானிஸ்தானியரும் பாகிஸ்தானை வெறுக்கின்றனர். ஆப்கானிஸ்தானுக்கு 5,000 ஆண்டுகால வரலாறு இருக்கிறது; அதை எவ்வாறு பாதுகாப்பது என்று அவர்களுக்கு தெரியும். பாகிஸ்தான் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த ஆயிரக்கணக்கானோர் இருக்கின்றனர். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை எங்களது இரண்டாவது தலைநகராக மாற்றுவோம். 

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....