Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ஈபிஎஸ் ஆதரவாளருக்கு நெருக்கடி! லஞ்ச ஒழிப்புத்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்ய மறுத்த உயர்நீதிமன்றம்

    ஈபிஎஸ் ஆதரவாளருக்கு நெருக்கடி! லஞ்ச ஒழிப்புத்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்ய மறுத்த உயர்நீதிமன்றம்

    முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான, ஆர்.இளங்கோவன் நிர்வாகியாக உள்ள அறக்கட்டளையின் கல்வி நிறுவன கட்டிடங்களை ஆய்வு செய்வதற்கு, லஞ்ச ஒழிப்புத் துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

    முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான ஆர்.இளங்கோவன் என்பவர் சேலம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும், தமிழ்நாடு மாநில வங்கியின் தலைவராகவும் பதவி வகித்தார். வருமானத்திற்கு அதிகமாக 3 கோடிக்கு மேற்பட்ட சொத்துக்களை சேர்த்துள்ளதாக இவர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த வழக்கு தொடர்பாக இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவீன்குமார் உள்ளிட்டோர் முசிறியில் உள்ள சுவாமி அய்யப்பன் அறங்காவலர்களாக இருந்து வருகின்றனர். 

    இதையும் படிங்க: முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை தங்கம் மறைவு; தலைவர்கள் இரங்கல்

    இந்நிலையில், சுவாமி அய்யப்பன் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களின் கட்டிடங்களை மதிப்பீடு செய்யவும், அறக்கட்டளை குறித்த விவரங்களை வழங்கக் கோரியும் ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் தரப்பிலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் இளங்கோவனுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

    இதனை எதிர்த்து அறக்கட்டளை சார்பில் அறங்காவலர் என்.அருண் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அறக்கட்டளையின் தரப்பில், கடந்த 2006 ஆம்  ஆண்டு முதல் செயல்படும் ஒரு பொது அறக்கட்டளையில், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்த அதிகாரம் இல்லை என்றும், அறக்கட்டளையின் ஆவணங்களை கோருவதும், மதிப்பீடு செய்வதும் சட்டவிரோதம் என்றும் வாதிடப்பட்டது.

    லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில், அறக்கட்டளை நிர்வாகியாக இளங்கோவன் பொறுப்பேற்றபோது 17 ஏக்கர் நிலம் மட்டுமே இருந்த நிலையில், 2017 முதல் 2021 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 234 ஏக்கர் நிலம் அறக்கட்டளை பெயரில்உள்ளது. அறக்கட்டளை நடத்தும் கல்வி நிலையங்களில் 14 ஆயிரத்து 757 சதுர மீட்டர் பரப்பிற்கு புதிய கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்தது. இவற்றை ஆய்வு செய்யவே சம்மன் அனுப்பப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி நிர்மல்குமார், லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவராக சேர்க்கப்பட்டாலும், இல்லாவிட்டாலும் அறக்கட்டளை கட்டிடங்களை மதிப்பீடு செய்வதையும், ஆவணங்களை கோருவதையும் ஆட்சேபிக்க முடியாது. புலன் விசாரணையின்போது ஆதாரங்களை சேகரிக்கும் விசயத்தில் தலையிட முடியாது என தெரிவித்து, அறக்கட்டளைக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....