Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு400 கோடியில் உருவாகி வரும் பிரமாண்ட பேருந்து நிலையம்! எப்போது திறக்கப்போகிறார்கள் தெரியுமா?

    400 கோடியில் உருவாகி வரும் பிரமாண்ட பேருந்து நிலையம்! எப்போது திறக்கப்போகிறார்கள் தெரியுமா?

    சென்னை, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரும் பிப்ரவரி மாதம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி தகவல் தெரிவித்துள்ளார். 

    சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக கோயம்பேட்டில் பேருந்து நிலையம் கட்டப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் தற்போது கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 40 ஏக்கர் பரப்பளவில் 400 கோடி ரூபாய் செலவில் மிகப்பெரிய பேருந்து முனையம் காட்டும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    மிக முக்கியமாக, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்காக இந்த பேருந்து நிலையம்கட்டப்பட்டு வருகிறது. இதில், அனைத்து அரசு போக்குவரத்து கழகங்கள், மாநகர போக்குவரத்து கழகம், ஆம்னி பேருந்துகள் அனைத்தும் ஒரே இடத்தில் இயக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுகின்றன. 

    இதையும் படிங்க:ஹாலோவீன் பயமுறுத்தலால் நடுங்கிப் போன அப்பாவி குழந்தைகள்

    இந்தத் திட்டம் கடந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பணி தற்போது கடைசி கட்டத்தில் உள்ளது.

    இந்நிலையில், பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படும் என பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. இதுதொடர்பாக  அமைச்சர் முத்துசாமி, ‘சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரியில் திறக்கப்படும்’ என தகவல் தெரிவித்துள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....