Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ஹாலோவீன் பயமுறுத்தலால் நடுங்கிப் போன அப்பாவி குழந்தைகள்

    ஹாலோவீன் பயமுறுத்தலால் நடுங்கிப் போன அப்பாவி குழந்தைகள்

    அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஹாலோவீன் கொண்டாட்டங்கள் மிகவும் பிரபலாமாக கொண்டாடப்படும் விழாக்கள் ஆகும். பொதுமக்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப பேய், பிசாசு மற்றும் விகார தோற்றம் கொண்ட வேடமிட்டு தெருக்களில் வலம் வந்து பிறரை பயம்காட்டி வருவார்கள்.

    இந்த ஹாலோவீன் கொண்டாட்டங்கள் ஆண்டுதோறும் அக்டோபர் மாத இறுதி நாளில் கொண்டாடப்படும். இந்த திருவிழாவில் ஆண், பெண் வேற்றுமையின்றி அனைவரும் பல வேடங்களைத் தரித்து மகிழ்வது வழக்கமான ஒன்று. 

    இந்நிலையில், அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி மாகாணத்தில் குழந்தைகள் காப்பகம் ஒன்று அமைந்துள்ளது. இதில், பல தரப்பு மக்களும் தங்களது குழந்தைகளின் பாதுகாப்பைக் கருதி, அவர்களை அந்த காப்பகத்தில் விட்டு வேலைக்கு செல்கின்றனர். 

    அப்படி செல்கையில், அந்த காப்பகத்தில் உள்ள ஊழியர்கள், பேய் போன்ற வேடம் போட்டு கொண்டு, குழந்தைகளை பயமுறுத்தி உள்ளனர். இந்தச் செயல் விளையாட்டுக்காகவா அல்லது உள்நோக்கத்துடன் செய்யப்பட்டதா என்பது தெரியவில்லை. 

    இதையும் படிங்க:தென்னாப்பிரிக்காவை கதிகலங்க வைத்த இந்திய பந்துவீச்சாளர்கள்…குல்தீப் அபாரம்!

    காலையில் சிற்றுண்டி சாப்பிட மேசையில் அமர்ந்து இருந்த குழந்தைகளையும் ஊழியர்கள் பயமுறுத்தி உள்ளனர். இதனால், குழந்தைகள் அச்சத்தில் அலறியபடி இருந்துள்ளனர். இது தொடர்பான காணொளி வைரலான நிலையில், சமூக ஊடகத்தில் இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து காப்பக ஊழியர்கள் 4 பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....