Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுதென்னாப்பிரிக்காவை கதிகலங்க வைத்த இந்திய பந்துவீச்சாளர்கள்...குல்தீப் அபாரம்!

    தென்னாப்பிரிக்காவை கதிகலங்க வைத்த இந்திய பந்துவீச்சாளர்கள்…குல்தீப் அபாரம்!

    தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 100 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் தென்னாப்பிரிக்க அணி 3 இருபது ஓவர் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. 

    இருபது ஓவர் போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில், இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியிடம் தோல்வியடைந்தது.

    இதைத்தொடர்ந்து, ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதானத்தில் கடந்த 9-ம் தேதி நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில்  தென்னாப்பிரிக்காவை இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதையும் படிங்க: ‘தமிழ் மொழி திராவிடத்தை நம்பி இல்லை; கட்சியை காப்பாற்றும் வேலையை மட்டும் பாருங்கள்’ – அண்ணாமலை

    ஒருநாள் தொடர் யாருக்கு என்பதை முடிவு செய்யும் கடைசி ஒருநாள் போட்டி தற்போது டெல்லியில் உள்ள அருன் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

    இதையடுத்து, தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கில் களம் கண்டது. ஆனால், இந்திய பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபடியே தென்னாப்பிரிக்கா அணி இருந்தது. அந்த அணி சார்பில் அதிகபட்சமாக ஹென்றிச் கிளாசன் 34 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 

    மொத்தத்தில், 27.1 ஓவர்களின் முடிவிலேயே தென்னாப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் வெறும் 18 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ஷபாஸ் அகமது போன்றோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினர். 

    இந்தியா 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கியுள்ளது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....