Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇறந்த மகனை தோளில் சுமந்து சென்ற அவலம்: பார்ப்போரை கண் கலங்க வைத்த நிகழ்வு...

    இறந்த மகனை தோளில் சுமந்து சென்ற அவலம்: பார்ப்போரை கண் கலங்க வைத்த நிகழ்வு…

    பாம்புகடித்து இறந்த சிறுவனின் உடலை ஏற்றிச் செல்ல ஆம்புலன்ஸ் வராததால் , தந்தையே தோளில் சுமந்து சென்ற காட்சி பார்ப்போரை கண் கலங்க வைத்துள்ளது.

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள புனித நகரமான ஸ்ரீகாளஹஸ்தி அருகே உள்ள திருவபுத்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் செஞ்சய்யா என்ற விவசாயி. இவருக்கு ஏழு வயதில் பசவையா என்ற மகன் உள்ளார் .மகன் பசவையா அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

    தான் விவசாயம் செய்யும் நிலத்திற்கு அருகிலேயே வீடுகட்டி வசித்து வருவதால், வழக்கம் போல் நேற்று காலை 6 மணியளவில் குடும்பத்தினரோடு ,அவர்களது நிலத்தில் விவசாய வேலைசெய்து கொண்டிருந்துள்ளனர். அப்போது அவரது ஏழு வயது மகன் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அவனை பாம்பு கடித்துள்ளது.

    பாம்பு கடித்த அடுத்த நிமிடமே மகன் பசவையாவை உடனடியாக சிகிச்சைக்காக, தன் கிராமத்திற்கு அருகில் உள்ள கே.வி.பி. புரம் முதன்மை சுகாதார மையத்திற்கு அழைத்துச்சென்று சேர்த்துள்ளார். அங்கு அந்த சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் ,சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளான்.

    இதையும் படிங்க:திரையரங்கில் தத்தளிக்கும் நானே வருவேன்…ஓடிடியில் சாதிக்குமா?

    இதனையடுத்து சிறுவனின் உடலை வீட்டுக்கு கொண்டு செல்லவதற்காக ,108 ஆம்புலன்சை தொடர்புகொண்ட போது ,அவர்கள் சிறுவனின் உடலை ஏற்றிச்செல்ல மறுத்துள்ளனர். பிறகு ஆட்டோ உள்ளிட்ட வாகன டிரைவர்களும் மறுத்துவிடவே, வேறு வழியின்றி மகன் பசவையாவின் உடலை, தனது தோளில் சுமந்தபடியே வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியொத்தோடு பார்போரையும் கண்கலங்க வைத்தது.

    மருத்துவமனை நிர்வாகம் மற்றும் அதிகாரிகளின் அலட்சியத்தால் இதுபோன்ற நிகழ்வுகள் அவ்வப்போது தொடர்கதையாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....