Monday, March 18, 2024
மேலும்
    Homeவாகனம்சுசூகி நிறுவனத்தின் அடுத்த பார்வை இந்தியா : ஜிக்ஸர் பைக்குகள் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறதா ?

    சுசூகி நிறுவனத்தின் அடுத்த பார்வை இந்தியா : ஜிக்ஸர் பைக்குகள் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறதா ?

    சுசூகி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் தாய் நிறுவனமான சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனம் 125 சிசி முதல் 300 சிசி வரையிலான மோட்டார்பைக்குகளை ஏற்றுமதி செய்யும் மையமாக இந்தியாவை மாற்ற முடிவு செய்துள்ளது. 

    இதுகுறித்து பேசியுள்ள சுசூகி மோட்டார் இந்தியாவின் நிர்வாக துணைத்தலைவர் தேவஷிஷ் கண்டா இது சென்ற ஆண்டே எடுத்த முடிவு என்று கூறியுள்ளார். மேலும், எங்களுடைய சுசூகி மோட்டார் இந்தியா நிறுவனம் யூனிட்டுகளின் அடிப்படையில் மிகப்பெரிய நிறுவனமாக உள்ளது. சென்ற ஆண்டே சுசூகியின் தலைமை நிறுவனம் இந்தியாவை குறைந்த சிசி பைக்குகளுக்கான தாய் மையமாக மாற்ற முடிவு செய்திருந்தது. 

    அதற்கான சில வேலைகள் சென்ற ஆண்டே தொடங்கிவிட்ட நிலையில் இப்பொழுது அது முழுமையடைய போகிறது என்று கூறியிருந்தார். இந்த செய்தியை இடிஏ ஆட்டோ நிறுவனத்தின் நிகழ்வில் கூறி இருந்தார். 

    கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுசூகி நிறுவனத்தின் விற்பனை விகிதமானது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. சுசூகியின் விற்பனை யூனிட்டுகள் 1,45,000 ஆக உயர்ந்துள்ளன. மேலும், இந்த வருடமும் விற்பனையை நிலைப்படுத்தி சென்ற ஆண்டைப் போலவே வளர்ச்சியை மேம்படுத்த திட்டமிட்டுள்ளனர். 

    தற்பொழுது ஜிக்ஸர் பைக்கின் விற்பனையாளர்கள் தங்களது வாகனங்களை சார்க் நாடுகள், லத்தீன் அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் தாய்நாடான ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்கிறது. 

    நாங்கள் பணத்தை முன்னிறுத்தி செயல்படும் சந்தைகளை விரும்பவில்லை. நன்கு தரமான மாற்று உயர்தர சந்தைகளான தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் தைவான் போன்ற நாடுகளின் சந்தைகளுக்கு முன்னேற விரும்புகிறோம் என்று கூறியுள்ளது அந்நிறுவனம். 

    கடந்த  வருடம் மட்டும் 7,54,938 யூனிட்டுகளை சர்வதேச சந்தையில் விற்றுத் தீர்த்திருக்கிறது சுசூகி நிறுவனம். மேலும், வருடத்திற்கு ஒரு மில்லியன் யூனிட்டுகளை உற்பத்தி செய்ய தேவயான அனைத்து வசதிகளும் ஹரியானாவில் உள்ள குருக்கிராமில் உள்ளது என்று கூறி உள்ளது. 

    தங்களுடைய நிறுவனத்தின் அதிவேகமான உற்பத்தியை உறுதி செய்துள்ள சுசூகி நிறுவனம், அதன் கட்டுக்குள் வைக்கவும் உறுதி கூறியுள்ளது. ஆனால், இந்த உருவாகும் தளம் புதிதாக கட்டப்படுமா அல்லது விரிவாக்கம் செய்யப்படுமா இல்லை பழைய இடத்திலேயே செயல்படுமா போன்ற எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.   

    குறைகடத்திகளில் பிரச்சினை ஏற்படாமலே இருந்திருந்தால் நாங்கள் சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் சிறப்பாக செயல்பட்டிருப்போம். ஆனால், இந்த முறை கவனமுடன் உள்ளோம் என்று கூறினார். தொடர்ந்து குறைக்கடத்திகளில் பிரச்சினை ஏற்பட்டு வருவதால் நிலையான திறனை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார். எப்படியோ, இந்தியா இனிமேல் சுசூகியின் முக்கிய தயாரிப்பு மையமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....