Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'இதுக்கு அப்புறம் இன்னும் பயங்கரமா இருக்கும்' - பீஸ்ட் ட்ரைலர் அலசல்!

    ‘இதுக்கு அப்புறம் இன்னும் பயங்கரமா இருக்கும்’ – பீஸ்ட் ட்ரைலர் அலசல்!

    தளபதி விஜய் அவர்களுக்கு தற்போது இருக்கும் ரசிக பட்டாளம் குறித்து அனைவரும் அறிவர். இந்த ரசிக பட்டாளம் அனைத்தும் தற்போது நல்ல குஷியுடன் இருப்பர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. பல நாளாக எப்போது வரும் என்ற எதிர்ப்பார்த்தபடியே இருந்த பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரைலர் ஒரு வழியாக தற்போது வெளிவந்துள்ளது .

    பீஸ்ட் முன்னோட்டம் 

    ட்ரைலர் அறிவிப்பு வெளிவந்ததில் இருந்தே, சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் பீஸ்ட் தொடர்ந்து ட்ரெண்டில் இருந்து வருகிறது. இவ்வளவு நாட்கள் அமைதியாக இருந்த பீஸ்ட் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், இன்று மதியத்தில் இருந்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் ட்ரைலருக்கான புரோமஷன்களை செய்து வந்தது. 

    கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற திரைப்படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் அவர்கள்தான் பீஸ்ட் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதற்கு முன்பு இவர் இயக்கத்தில் வெளிவந்த இரு திரைப்படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆன நிலையில் விஜய் அவர்களுடன் இவர் கைக்கோர்த்திருப்பது இயல்பாகவே இருக்கும் விஜய் திரைப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை சற்றே அதிகரித்துள்ளது. 

    ஏற்கனவே விஜய், நெல்சன் திலீப்குமார், அனிரூத், வெளிவந்த பீஸ்ட் திரைப்பட பாடல்கள், புகைப்படங்களால் அதிகரித்த பீஸ்ட் திரைப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு என்பது, ட்ரைலருக்கு பிறகு பல மடங்கு அதிகரித்துள்ளது. 

    பிரிமியம் லார்ஜஸ்ட் வடிவம் 

    பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரைலர் பல திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஆம்! “இந்தியாவில், ஒரு திரைப்படத்தின் ட்ரைலர் பெரும் திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல் முறை” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்தியாவின் முதல் பிரிமியம் லார்ஜஸ்ட் வடிவ முறையில் ஒரு ட்ரைலர் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை என்ற தகவல்களும் தற்போது வந்துள்ளன. ஆம்! பீஸ்ட் திரைப்பட ட்ரைலரை நாம் கண்டது பிரிமியம் லார்ஜஸ்ட் வடிவத்தில்தான்!

    பொதுவாக ட்ரைலரின் காட்சிநிலை விகிதமானது (aspect ratio) 35 மிமி அளவில்தான் இருக்கும் ஆனால் பீஸ்ட் ட்ரைலரின் காட்சிநிலை விகிதமானது (aspect ratio) 70 மிமி வரை இருக்கும். இந்த 70 மிமி அளவைத்தான் பிரிமியம் லார்ஜஸ்ட் வடிவம் என்கிறார்கள். 

    முன்னோட்டத்தின்படி கதைக்களம் 

    ட்ரைலரின்படி ஷாப்பிங் மால் ஒன்றை தீவிரவாதிகள் தங்களின் பிடியில் கொண்டுவர, அந்நேரம் பார்த்து இராணுவ வீரரான வீரராகவன் அவர்களும் அந்த ஷாப்பிங் மாலில் சிக்கிக்கொள்கிறார். ஆனால் சிக்கிக்கொண்டது வீர ராகவன் எனும் விஜயா? தீவிரவாதக்குழுவா என்ற கேள்வி எழும்புகிறது. 

    அந்த ஷாப்பிங் மாலில் உள்ள மக்களை தீவிரவாதக் கும்பலிடம் இருந்து வீரராகவன் எப்படி காப்பாத்துகிறார் என்பதே கதை. இது திரைப்படத்தின் ட்ரைலரில் இருந்து தெளிவாகிறது. 

    திரைப்படத்தில் அதிக காட்சிகள் ஷாப்பிங் மாலுக்குள்ளே இருக்கப்போகிறது என்பதால் காட்சிகளை தொய்வில்லாமல் எப்படி நெல்சன் கொண்டுப்போகப் போகிறார் என்ற வியப்பும் இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. 

    கவர்ந்தவை 

    ட்ரைலரின் ஆரம்பத்தில் இயக்குநர் செல்வராகவன் பேசும் வசனங்கள் சிரிப்பை மெல்லத் தருவதாய் உள்ளன. அதே சமயம் படத்தின் கதையை அழகாக சொல்லுவதாகவும் உள்ளன.

    தளபதி விஜய் இராணுவச் சண்டையில் இருப்பதான காட்சிகள் திரையரங்குகளில் ரசிகர்களை விறுவிறுப்பிலும் கொண்டாட்டத்திலும் ஆழ்த்தும் என்றே தெரிகிறது. விஜய் துப்பாக்கிகளை உபயோகிக்கும் ஒவ்வொரு காட்சியும் தீ பறப்பதாகவே உள்ளது. அதோடு தளபதி விஜய் அலட்டாமல் அளந்து பேசும் வசனங்களும் ரசிக்கக் கூடியதாகவே உள்ளது. 

    ட்ரைலரில் இடம்பெற்ற காட்சிகள் அனைத்தும் பிரம்மாண்டமாய் இருக்க, விஜய் மிகவும் ஸ்டைலிஷாக இருக்கிறார். பீஸ்ட் திரைப்படம் வண்ணங்களால் ஆக்கிரமித்திருக்கப்படும் என்றே ட்ரைலர் தெரிவிக்கிறது. மேலும் ட்ரைலரைப் பார்க்கையில் நெல்சன் திலீப்குமார் தனது முந்தைய இரு படங்களில் இருந்து சற்று விலகி ஆக்சன் காட்சிகளை அதிகம் வைத்துள்ளார் என்றே தோன்றுகிறது. 

    ட்ரைலரில் வரும் பாடல் கவரும் வண்ணம் உள்ளன. இசையமைப்பாளர் அனிருத் மற்றும் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இருவரின் பங்கும் ட்ரைலரில் மிக அதிகம். காட்சிகளில் இருக்கும் வீரியங்களும், வண்ணங்களும் அதைக்கூட்டிக் காட்டும் இசையும் இரண்டையும் ஒன்றிணைத்து மாஸூம் க்ளாஸூமாக ட்ரைலரை தயார் செய்த படத்தொகுப்பாளர் நிர்மல் அவர்களுக்கு தனி பாராட்டை கொடுத்தே ஆக வேண்டும். 

    ஒருவேளை இருக்குமோ 

    பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரைலர் பிரபல சீரிஸான மணி ஹெய்ஸ்ட்டை அவ்வபோது நியாபகப்படுத்துவதாகவும் உள்ளது. மேலும், ஒரு சூழலுக்குள்ளே ஒட்டு மொத்த கதையும் என்பதால் திரைப்படத்தின் வேகம் குறித்த கேள்விக்குறி எழும்பத்தான் செய்கிறது. 

    எது எப்படியாக இருந்தாலும் பீஸ்ட் திரைப்பட ட்ரைலர் பார்ப்பவர்களை கவர்ந்து வருகிறது என்பதில் மட்டும் மாற்றுக்கருத்து இல்லை. 

    திரையரங்குகளில் பீஸ்ட் 

    பலரையும் கவர்ந்து வரும் இந்த ட்ரைலரானது இணையத்தில் செய்யப்போகும் சாதனைகள் என்னென்ன என்பதைப் பொறுத்திருந்துப் பார்ப்போம். மேலும் பீஸ்ட் திரைப்படத்தின் இந்த முன்னோட்டம் கொடுத்துள்ள எதிர்ப்பார்ப்பை திரைப்படம் பூர்த்தி செய்கிறதா என்று பார்க்க, நாம் ஏப்ரல் 13 ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும். 

    ட்ரைலரைக் காண ; https://www.youtube.com/watch?v=0E1kVRRi6lk

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....