Saturday, March 16, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்நீயா நானா வாங்க பாக்கலாம்.. டெஸ்லா கார்களுக்கு போட்டியாக களமிறங்கும் ஓலா கார்கள்

    நீயா நானா வாங்க பாக்கலாம்.. டெஸ்லா கார்களுக்கு போட்டியாக களமிறங்கும் ஓலா கார்கள்

    40 லட்ச ரூபாய் மதிப்புள்ள டெஸ்லா நிறுவன கார்களை வாங்க வாடிக்கையாளர்கள் விருப்பம் காட்ட மாட்டார்கள் என ஓலா நிறுவனர் தெரிவித்துள்ளார். 

    எலக்ட்ரிக் வாகனங்கள்தான் அடுத்த தலைமுறைக்கானது என்று எலக்ட்ரிக் ரக வாகன தயாரிப்பில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறது ஆட்டோமொட்டிவ் நிறுவனங்கள். ஓலா ஏற்கனவே தங்களின் வாகனங்களுக்கான முன்பதிவை தொடங்கி, அதில் வெற்றியும் கண்டது. 

    சமீபத்தில்தான் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தங்களின் உற்பத்தியை ஆரம்பித்து அதனில் ஏறுமுகம் கண்டு தங்கள் நிறுவனத்தின் S1 ரக மின்சார ஸ்கூட்டர்களை  தன் முதற்கட்ட வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்தது. மேலும், வாகனங்களை சார்ஜ் செய்ய நகரங்களில் ஹைப்பர்சார்ஜர் பொருத்தும் பணியையும் ஓலா தொடங்கியுள்ளது. 

    இந்நிலையில், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அடுத்து, எலக்ட்ரிக் கார் தயாரிப்பு தொழிலில் ஓலா நிறுவனம் களமிறங்கியுள்ளது. அதன்படி, 2024-ம் ஆண்டு முதல் எலக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு வருமென அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், 2027-ம் ஆண்டில் ஆண்டுக்கு ரூபாய் 10 லட்சம் கார்கள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் ஓலா அறிவித்துள்ளது. 

    இதுகுறித்து ஓலா நிறுவனர் பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளதாவது:

    எலான் மஸ்க்கின் டெஸ்லா கார்களுக்கு, ஓலா நிறுவன எலக்ட்ரிக் கார்கள் சவாலாக இருக்கும். அதே சமயம், சுமார் 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள டெஸ்லா நிறுவன கார்களை வாங்க வாடிக்கையாளர்கள் விருப்பம் காட்ட மாட்டார்கள். அதைவிட குறைந்த விலையில் கார்களை அறிமுகம் செய்ய தங்களுக்கு வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறாக அவர் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: இரும்பு கழிவுகளை விற்பனை செய்ததன் மூலம் 2500 கோடி சம்பாதித்த இந்திய ரயில்வே

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....