Sunday, March 17, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்இறுதியாக இந்தியாவில் உள்ள 10 நகரங்களுக்கு 'ஸ்ட்ரீட் வியூ' வசதி

    இறுதியாக இந்தியாவில் உள்ள 10 நகரங்களுக்கு ‘ஸ்ட்ரீட் வியூ’ வசதி

    கூகுள் மேப்ஸ் இறுதியாக இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் அதன் ஸ்ட்ரீட் வியூ (Street View) சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. 

    கூகுள் நிறுவனம், ஸ்ட்ரீட் வியூ சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்த பல ஆண்டுகளாக போராடி வருகிறது. இந்நிலையில், தற்போது இந்தச் சேவையைக் கூகுள் நிறுவனம் டெக் மஹிந்திரா மற்றும் ஜெனிசிஸ் உடன் இணைந்து செயல்படுத்த உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

    மேலும், இந்த கூகுள் ஸ்ட்ரீட் வியூவை பயன்படுத்தி பயனர்கள் உலகெங்கிலும் உள்ள வீதிகளை 360 டிகிரி கோணத்தில் பார்க்க முடியும் என்று கூகுள் தெரிவித்துள்ளது. 

    முன்னதாக, கூகுள் ஸ்ட்ரீட் வியூ சேவையை இந்தியாவில் தொடங்க முயன்றபோது, போதிய பாதுகாப்பு வசதி இல்லாததால் அதன் செயல்பாடுகளுக்கு இந்திய அரசாங்கம் அனுமதி அளிக்காமல் மறுத்துள்ளது.

    இந்நிலையில், தேவையான பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்து இந்தியாவின் 10 முக்கிய நகரங்களில் கூகுள் மேப்ஸ் ஸ்ட்ரீட் வியூ (Street View) சேவையை அறிமுகப்படுத்த உள்ளது.

    அதாவது பெங்களூரு, சென்னை, டெல்லி, மும்பை, ஹைதராபாத், புனே, நாசிக், வதோதரா, அகமது நகர் மற்றும் அமிர்தசரஸ் போன்றவற்றில் இச்சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும், 2022-ம் ஆண்டு இறுதிக்குள் 50க்கும் மேற்பட்ட இந்திய நகரங்களில் இந்தச் சேவையைக் கொண்டுவரத் திட்டமிட்டிருப்பதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது. தனிநபர் பாதுகாப்பிற்காக இந்த ஸ்ட்ரீட் வியூவில் தனிநபர்களின் முகங்கள் மற்றும் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகள் மங்கலாகத்தான் காண்பிக்கப்படும் என்று கூகுள் கூறியிருக்கிறது. கூடுதலாக, காற்றினுடைய தரத்தின் தகவல்களை வழங்குவதற்காக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துடனும் கூகுள் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    மெட்டா தளம் மனித உரிமை ரீதியாக எதிர்கொள்ளவிருக்கும் சிக்கல்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....