Sunday, March 17, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்மெட்டா தளம் மனித உரிமை ரீதியாக எதிர்கொள்ளவிருக்கும் சிக்கல்கள்

    மெட்டா தளம் மனித உரிமை ரீதியாக எதிர்கொள்ளவிருக்கும் சிக்கல்கள்

    மெட்டா தளம் மனித உரிமை ரீதியாக எதிர்கொள்ளவிருக்கும் சிக்கல்களை களைய மதிப்பீடு அறிக்கை ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது. 

    இந்தியா மற்றும் மெட்டா தளத்துடன் தொடர்புடைய பிற நாடுகளில் உள்ள மனித உரிமை அபாயங்கள் குறித்து 2019-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஒரு சுதந்திர அமைப்பு மனித உரிமை அடிப்படையில் ஒரு அறிக்கை ஒன்றை உருவாக்கியது. இந்த அறிக்கையை உருவாக்கும் பொறுப்பை Foley Hoag LLP என்ற அமைப்பு மேற்கொண்டது.

    இந்த மனித உரிமை அடிப்படையிலான அறிக்கையை தயார் செய்ய, பங்குதாரர்கள், கல்வியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் என 40 நபர்களுடனான நேர்காணலில் அந்த தனியார் அமைப்பு ஈடுபட்டது.

    பயனர்களின் கல்வி தொடர்பான சவால்கள், உள்ளடக்கத்தைப் புகாரளிக்கும் மற்றும் மதிப்பாய்வு செய்வதில் உள்ள சிரமங்கள் மற்றும் பல்வேறு மொழிகளில் உள்ளடக்கக் கொள்கைகளைச் செயல்படுத்துவதில் உள்ள சவால்களையும் இந்த அறிக்கை குறிப்பிட்டது.

    இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: 

    மெட்டாவின் தளங்கள் மூன்றாம் தரப்பினரால் அதிகளவு அபாயத்தை உருவாக்கக்கூடியது. மேலும், கருத்து சுதந்திரத்தில் கட்டுப்பாடு, தகவல்கள் கசிவு போன்றவற்றாலும் மெட்டா அபாயத்தை எதிர்நோக்க வாய்ப்பிருக்கிறது. 

    விரோதத்தை தூண்டும் வகையிலான அச்சுறுத்தல்களையும் மெட்டா எதிர்கொள்ளும். 

    பயனர்களின் வெறுக்கத்தக்க பேச்சின் அபாயங்களையும், அது தொடர்பான விமர்சனங்களையும் மெட்டா நிறுவனம் எதிர்கொண்டுள்ளது. உள்ளடக்கக் கொள்கைகளில் நிறுவனம் மற்றும் வெளிப்புற பங்குதாரர் புரிதல்களுக்கு இடையே அதிகளவில் வித்தியாசம் உள்ளது. 

    இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    மேலும், மெட்டாவிற்கான பரிந்துரைகளை செயல்படுத்துதல் மற்றும் மேற்பார்வை செய்தல், உள்ளடக்கத்தை கட்டுப்படுத்துதல், தயாரிப்பு தலையீடுகள் போன்றவற்றை மெட்டா ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த பில்கேட்ஸ்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....