Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த பில்கேட்ஸ்

    பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த பில்கேட்ஸ்

    இந்தியாவின் முன்னேற்றத்தில் டிஜிட்டல் முன்னுரிமை அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு தொழிலதிபர் பில்கேட்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதையொட்டி கடந்த ஓராண்டு காலம் சுதந்திர தின அமுதப்பெருவிழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வந்தது. இந்நிலையில், நாட்டின் 76-வது சுதந்திர தினவிழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 

    76-வது சுதந்திர தினத்தையொட்டி இந்தியாவின் முன்னேற்றத்தில் சுகாதாரம் மற்றும் டிஜிட்டல் மாற்றம் ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு தொழிலதிபர் பில்கேட்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து பில்கேட்ஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது: 

    இந்தியாவின் முன்னேற்றம் வேகமெடுத்து வரும் இந்நிலையில், சுகாதாரம் மற்றும் டிஜிட்டல் மாற்றத்துக்கு அதிக முன்னுரிமை அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இந்த துறைகளில் இந்தியாவின் முன்னேற்றம் ஊக்கமளிப்பதாக உள்ளது. இந்தப் பயணத்தில் பங்குதாரராக இணைத்திருப்பதில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். 

    இவ்வாறு, பில்கேட்ஸ் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....