Sunday, March 17, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புதொடங்கப் போகிறது பொறியியல் கலந்தாய்வு; குறைகிறதா கல்லூரிகளின் எண்ணிக்கை?

    தொடங்கப் போகிறது பொறியியல் கலந்தாய்வு; குறைகிறதா கல்லூரிகளின் எண்ணிக்கை?

    தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி முதல் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது. 

    பொறியியல் கல்லூரிகளுக்கான இளங்கலை பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 20-ம் முதல் ஆகஸ்ட் 23-ம் தேதி வரை விளையாட்டு, மாற்றுத்திறனாளி, முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு ஆகிய சிறப்புப் பிரிவினருக்கான  கலந்தாய்வு நடைபெற உள்ளது. அதன் பின்னர், பொதுப் பிரிவினருக்கான இளங்கலை பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு வரும் 25-ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இளங்கலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஜூன் மாதம் 20-ம் தேதி தொடங்கியது. இதற்கு 2 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பப்பதிவு செய்திருந்தனர். இவற்றுள் ஒரு லட்சத்து 69 ஆயிரம் பேர் தகுதியானவர்கள் ஆவர்.

    நடப்பாண்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தன்னாட்சி பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு பி.இ., பி.டெக். படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இதில் தன்னாட்சி கல்லூரிகளில் 55 முதல் 60 சதவீத அரசு ஒதுக்கீட்டு இடங்களாக ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 627 பி.இ., பி.டெக். இடங்களும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சுமார் 900 இடங்களும், அரசு மற்றும் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் 10 ஆயிரம் இடங்களும், சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்து 270 இடங்களும், பி.ஆர்க். படிப்பில் 106 இடங்களும் வருகின்றன.

    மேலும், இந்த ஆண்டு கலந்தாய்வில் 434 பொறியியல் கல்லூரிகள் இடம்பெற இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2018-ம் ஆண்டு முதல் முறையே கல்லூரிகளின் எண்ணிக்கையை பார்க்கையில் 509, 480, 461, 440 பொறியியல் கல்லூரிகள் என ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது. அதன்படி, நடப்பாண்டிலும் கல்லூரிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விமானக் கட்டணங்களுக்கு இணையாக பேருந்துக் கட்டணம்? – திமுகவை வலியுறுத்தும் ஓபிஎஸ்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....