Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்நடிகர் விஜய்யிடம் இருந்து அபராதம் வசூலிக்க இடைக்கால தடை

    நடிகர் விஜய்யிடம் இருந்து அபராதம் வசூலிக்க இடைக்கால தடை

    வருவாயை மறைத்ததாக நடிகர் விஜய்க்கு 1.5 கோடி அபராதம் விதித்த வருமான வரித் துறை உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

    கடந்த 2016-17 ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்த போது, அந்த ஆண்டிற்கான வருமானமாக ரூ.35.42 கோடி பெற்றதாக குறிப்பிட்டார்.

    இதைத் தொடர்ந்து, அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை வருமான வரித் துறையினர் மேற்கொண்டனர். அதில் 2015-ம் ஆண்டுடன் நடத்தப்பட்ட சோதனையின் ஆவணங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ரூ.15 கோடியை மறைத்துள்ளது தெரியவந்ததாக தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், வருவாயை மறைத்ததற்காக ரூ.1.5 கோடி அபராதம் விதித்து கடந்த ஜூன் 30-ம் தேதி வருமான வரித் துறை உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. காலதாமதமாக விதிக்கப்பட்ட உத்தரவு என்பதால், இதனை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், வருமான வரித் துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். மேலும், மனு தொடர்பாக வருமான வரித் துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    கோயில் திருவிழாக்களில் உயர்நீதிமன்றம் புதிய அனுமதி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....