Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்மாணவர்களின் வருகையை அதிகரிக்க கல்லூரியின் விநோத முயற்சி; அழகியை பேராசிரியையாக நியமித்து அமர்க்களம்

    மாணவர்களின் வருகையை அதிகரிக்க கல்லூரியின் விநோத முயற்சி; அழகியை பேராசிரியையாக நியமித்து அமர்க்களம்

    சீனாவில் கல்லூரி மாணவர்கள் வகுப்பறைக்கு வராமல் இருப்பதால், டிக்டாக் அழகியை கல்லூரி நிர்வாகம் பேராசிரியையாக பணி நியமனம் செய்துள்ளது. 

    பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அழகான பாசமான ஆசிரியர் கிடைப்பது வரம். நம்மிடம் ஒரு ஆசிரியர் அன்பாக பேசினால் போதும் அவர்கள் எடுக்கும் பாடத்தில் மட்டும் மதிப்பெண்கள் தானாக வந்துவிடும். 

    அப்படி அழகாக இருக்கும் ஆசிரியர்கள் நியமனம் செய்தால் மாணவர்கள் வகுப்பறைக்கு வருவார்கள் என்ற நம்பிக்கையில் சீனாவில் ஒரு கல்லூரி நிர்வாகம் டிக்டாக் ஆசிரியை ஒருவரை நியமித்துள்ளது. 

    அவர் பெயர் தான் ஜாங். இந்த இளம்பெண் பட்ட மேற்படிப்பை படித்து முடித்து, தற்போது சீனாவில் கட்டாய பாடமாக உள்ள Mao Zedong Thought எனும் பாடத்துக்காக தற்காலிக பேராசிரியராக நியமன செய்யப்பட்டுள்ளார். 

    இவர் டிக்டாக்கில் மிகவும் பிரபலமானவர். இவர் தனது கியூட் ஆக உள்ள விடீயோக்களால் எண்ணென்ற ரசிகர்களை கொண்டுள்ளார். 

    அப்படி டிக்டாக் அழகியான ஜாங்-கை ஆசிரியையாக நியமித்துள்ளதால், மாணவர்களின் வருகை என்பது அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பேசி புன்சிரிப்பை வெளிப்படுத்துவது தொடர்பான வீடியோ வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. 

    இதனால் கல்லூரி நிர்வாகத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இதனை கல்லூரி நிர்வாகம் முற்றிலும் மறுத்துள்ளது. மேலும் ‘ஜாங்’ திறமையின் அடிப்படையிலேயே பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: ‘பாகிஸ்தானுக்கு விளையாட செல்வீர்களா?’ – ரோஹித் சர்மா அளித்த பதில் என்ன?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....