Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி; ரூ.10-ல் இருந்து ரூ.50-ஆக உயர்ந்த சம்பவம்...

    ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி; ரூ.10-ல் இருந்து ரூ.50-ஆக உயர்ந்த சம்பவம்…

    நடைமேடைக் கட்டணத்தை ரூ.10-ல் இருந்து 50 ரூபாயாக அதிகரித்து மேற்கு மண்டல ரயில்வே நிர்வாகம் அறிவித்து வெளியிட்டுள்ளது.

    மும்பை மண்டலத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் நடைமேடைக் கட்டணம் ரூ.10-லிருந்து 50 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கட்டண உயர்வு அக்டோபர் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மும்பையின் முக்கிய ரயில் நிலையங்கள் மத்திய மும்பை, தாதர், போரிவாலி, பாந்த்ரா ஜங்ஷன், வாபி, வால்சத், உத்னா மற்றும் சூரத் ரயில் நிலையங்களில் நடைமேடைக் கட்டணம் உயர்ந்துள்ளதால், பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். 

    இந்த விலையுயர்வு குறித்து கேட்கையில், நடைமேடைகளில் அதிகக் கூட்டம் நிரம்பி வழிவதைத் தடுக்கவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், பயணிகள் சரியான நேரத்தில் ரயிலைப் பிடிக்கவும் இது வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளது. 

    முன்னதாக, சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் நடைபாதை (பிளாட்பாரம்) டிக்கெட் கட்டணத்தை தெற்கு ரயில்வே உயர்த்தியுள்ளது.  ரூ 10-ல் இருந்து ரூ 20-ஆக நடைபாதை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....