Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசிவகங்கை மாவட்டத்தில் நாளை முதல் அக்.31ம் தேதி வரை 144 தடை உத்தரவு

    சிவகங்கை மாவட்டத்தில் நாளை முதல் அக்.31ம் தேதி வரை 144 தடை உத்தரவு

    சிவகங்கை மாவட்டத்தில் நாளை முதல் அக்டோபர் 31-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .

    தமிழர் இனம் காக்க ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு எதிராக அனைவரையும் ஒன்றிணைத்து தீரத்துடன் போராடி தன்னுயிர் நீத்து தன்மானம் காத்த வீரத்தமிழர்களான மருது சகோதரர்களின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 24 அன்று தமிழக அரசால் அனுசரிக்கப்பட்டு வருகிறது .

    அந்த நாளில் அவர்களது வீரத்தையும் தியாகத்தையும் போற்றும் வகையில் தமிழகம் முழுவதும் அவர்களது திருவுருவச்சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பொதுமக்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர்.

    அன்றைய நாளில் சென்னை மட்டுமல்லாது சிவகங்கைச் சீமையின் அரசர் முத்து வடுகநாதரின் போர்படைத் தளபதிகளாக ,வீரம் செறிந்த தமிழர்களாக வளம் வந்தவர்களின் நினைவு தினத்தை சிவகங்கை மாவட்டம் முழுவதும் மிகச்சிறப்பாக அனுசரிப்பர்.

    இதனால் சிவகங்கை,திருப்பத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாத வண்ணம் காவல்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிவகங்கை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவது வழக்கம் .

    அதன்படி இந்த ஆண்டு திருப்பத்தூரில் மருதுபாண்டியர்களின் 221வது நினைவு தினத்தை முன்னிட்டும், அக்டோபர் 27-ல் காளையார்கோவிலில் நடக்கும் குருபூஜை தினத்தை முன்னிட்டும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.இந்த உத்தரவை சிவகங்கை மாவட்ட எஸ்.பி.செந்தில்குமார் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார் .

    இதையும் படிங்கதீபாவளி போனஸ்; இன்ப அதிர்ச்சி கொடுத்த வைர நிறுவனம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....