Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்வர்த்தகம்எப்படி இருந்தது பங்குச்சந்தை; இன்றைய நிலவரம் இதோ...

    எப்படி இருந்தது பங்குச்சந்தை; இன்றைய நிலவரம் இதோ…

    கடந்த வாரம் இந்திய பங்குச்சந்தையானது ஏற்ற இறக்கங்களுடன் இருந்தது. வெள்ளிக்கிழமை மிகவும் சரிவினை சந்தித்த பங்கு சந்தைகள் வாரத்தின் முதல் நாளான இன்று அதிக மாற்றமின்றி முடிவடைந்துள்ளன.

    சென்செக்ஸ் 37.78 புள்ளிகள் குறைந்து 54,288.61 புள்ளிகளாகவும், நி்ப்டி 51.50 புள்ளிகள் குறைந்து  16,214.70 புள்ளிகளாகவும் உள்ளது.

    இன்று அதிகபட்சமாக சென்செக்ஸ் 54,931.30 புள்ளிகள் வரையும், நிஃப்டி 16,414.70 புள்ளிகள் வரை சென்றது குறிப்பிடத்தக்கது. இரும்பு நிறுவனங்கள் பெரிய சரிவினை சந்தித்துள்ளன.

    உக்ரைன் – ரஷ்யா போர் பதற்றம் இன்னும் நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில் பணவீக்கமும், உணவுத்தட்டுப்பாடும் உலக அளவில் இன்னும் பாதிப்பினை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. 

    இன்று எம்&எம், மாருதி சுசூகி, ஹெச்யுஎல், ஏசியன் பெயிண்ட்ஸ், எல்&டி போன்ற நிறுவனங்கள் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது. ஜேஎஸ்டபுள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல், ஓஎன்ஜிசி போன்ற நிறுவனங்கள் இறக்கத்தில் முடிந்துள்ளன.

    அதிகபட்சமாக எம்&எம் 4.22 சதவீதம் உயர்ந்துள்ளது. ஜேஎஸ்டபுள்யூ ஸ்டீல் 13.24 சதவீதம் குறைந்துள்ளது. நேற்று, மத்திய அரசானது பெட்ரோல் டீசலுக்கான கலால் வரியினை குறைப்பதாக அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பும் இன்றைய பங்குச் சந்தையில் குறிப்பிட்ட மாற்றத்தினை உண்டாக்கியது குறிப்பிடத்தக்கது.

    டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு கடந்த சில நாட்களாகவே உயர்ந்து வருகின்றது. இந்நிலையில், இன்று 0.45 சதவீதம் வரை சரிந்து 77.50 ரூபாயாக உள்ளது. தங்கத்தினைப் பொறுத்த வரை 22 காரட் ஒரு கிராம் தங்கம் 20 ருபாய் உயர்ந்து 4,837 ரூபாயாகவும், சவரன் 160 ருபாய் உயர்ந்து 38,696 ரூபாயாகவும் உள்ளது.

    வெள்ளி கிராமிற்கு 60 காசுகள் அதிகரித்து 66.50 ரூபாயாகவும், 8 கிராமிற்கு 4.80 ரூபாய் அதிகரித்து 532 ரூபாயாகவும் உள்ளது.

    கிரிப்டோ மார்க்கெட்டினைப் பொறுத்த வரையில் கடந்த சில மாதங்களாகவே சரிந்த நிலையில் உள்ளது. இந்நிலையில் சில நாட்களாக பிட்காயின், எத்திரியம் போன்றவற்றின் மதிப்பில் பெரிய மாற்றம் ஏதுமின்றி உள்ளது.

    தற்போதைய நிலவரப்படி பிட்காயின் 23,61,400 ரூபாயாகவும், எத்திரியம் 1,61,200 ரூபாயாகவும் உள்ளது.

    இந்தியாவில் சரசரவென உயர்ந்து நிற்கும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த……

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....