Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்உக்ரைன் - இரஷ்யா போர்; போர் குற்றவாளியான ரஷ்யாவின் இராணுவ வீரர்!

    உக்ரைன் – இரஷ்யா போர்; போர் குற்றவாளியான ரஷ்யாவின் இராணுவ வீரர்!

    உக்ரைன் மீது ரஷ்யா போர்த் தொடுத்துவரும் நிலையில், ரஷ்ய வீரர் ஒருவரை போர்க்குற்றவாளியாக கைது செய்துள்ள உக்ரைன், அவ்வீரருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

    21 வயது ரஷ்ய ராணுவ வீரர் வாடிம் ஷிஷிமரின், உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பின் ஆரம்ப கட்டத்தில், நிராயுதபாணியான உக்ரைன் நாட்டை சேர்ந்த 62 வயது மூதாட்டியை கொன்றதால் போர் குற்றவாளியாக கைது செய்யப்பட்டார்.

    மேலும், அவர் வடகிழக்கில் உள்ள சுமி பகுதியில் ஒரு கிராமத்தில் உக்ரைன் குடிமகனை தலையில் சுட்டுக் கொன்றுள்ளார் என்றும் தெரிகிறது. இந்நிலையில், அவர் தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டார். தன் மீதான அழுத்தத்தின் காரணமாக அவ்வாறு செய்துவிட்டதாக அவர் கோர்ட்டில் தெரிவித்தார்.

    அனைத்து தண்டனை நடவடிக்கைகளையும் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

    அவர் கூறியதாவது;- “நான் உண்மையாக வருந்துகிறேன். அந்த சம்பவம் நடக்க நான் விரும்பவில்லை, நான் அங்கு இருக்க விரும்பவில்லை, ஆனால் அது நடந்தது. மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். இதற்காக அனைத்து தண்டனை நடவடிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளத் நான் தயார்” என்றார்.

    போர் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் எனக் கேட்ட வழக்கறிஞர்கள், இது ஒரு கிரிமினல் குற்றம் என்பதை நன்கு அறிந்துகொண்டே அவர் இந்த செயலை செய்தார் எனத் தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில் ரஷ்ய – உக்ரைன் போரின், முதலாவது போர்க்குற்ற விசாரணையில் உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள நீதிபதிகள் குழு, போர்க்குற்ற விசாரணையில் தீர்ப்பு வழங்கியது. அதன்படி, போர்க் குற்றங்களுக்கான முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட வாடிம் ஷிஷிமரின்க்கு வாழ்நாள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

    எப்படி இருந்தது பங்குச்சந்தை; இன்றைய நிலவரம் இதோ…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....