Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்தனுஷ் நடிக்கும் தி கிரே மேன் அப்டேட்...ஸ்டரஞ்சேர்ஸ் திங்ஸ் அப்டேட்...உங்களுக்காக இதோ!

    தனுஷ் நடிக்கும் தி கிரே மேன் அப்டேட்…ஸ்டரஞ்சேர்ஸ் திங்ஸ் அப்டேட்…உங்களுக்காக இதோ!

    அவெஞ்சர் பட இயக்குனர்களாகிய, ரூஸ்ஸோ சகோதரர்கள் (அந்தோணி மற்றும் ஜோ ரூஸ்ஸோ) இயக்கத்தில், கிறிஸ் எவென்ஸ், ரியான் கோஸ்லிங் ஆகியோருடன் தனுஷ் இனைந்து நடிக்கும் தி கிரே மேன் படத்திற்கான ட்ரைலர் இந்த வாரம் புதன் கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த திரைப்படமானது 2009ம் ஆண்டு மார்க் கிரேனே என்பர் எழுதிய நாவலினை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். ஜூலை மாதம் குறிப்பிட்ட திரையரங்குகளில் வழியாகும் இந்த திரைப்படம், ஜூலை 22ம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    200 மில்லியன் டாலர்கள் செலவு செய்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படமானது, நெட்ப்ளிக்ஸால் அதிக செலவு செய்யப்பட்டு எடுக்கப்பட்ட படமாகும். 2020ம் ஆண்டு ஜூலை மாதம் அறிவிக்கப்பட்ட இந்த திரைப்படத்தில், அதே வருடம் டிசம்பர் மாதம் தனுஷ் நடிக்கவுள்ளார் என்ற அறிவிப்பு வெளியானது.

    இதன்படி சென்ற மாதம் 26ம் தேதி கிறிஸ் எவென்ஸ், ரியான் கோஸ்லிங் மற்றும் தனுஷின் புகைப்படத்தினை முதல் முறையாக வெளியிட்டது படக்குழு. இந்நிலையில் படத்தின் ட்ரைலரானது வரும் புதன்கிழமை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    ஸ்டரஞ்சேர்ஸ் திங்ஸ்..

    இதே போன்று மற்றொரு புகழ்பெற்ற சீரியஸான ஸ்டரஞ்சேர்ஸ் திங்ஸின் நான்காவது சீசன் மூன்று வருடங்களுக்குப் பிறகு வெளியாகவுள்ளது. ஒன்பது எபிசோடுகள் கொண்ட இந்த சீசனானது 10 மணி நேரங்களுக்கும் மேல் கால அளவினைக் கொண்டுள்ளது. 

    ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பினைப் பெற்ற ஸ்டரஞ்சேர்ஸ் திங்ஸ் மூன்றாவது சீசன் வெளிவந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில், தற்போது ஸ்டரஞ்சேர்ஸ் திங்ஸ் நான்காவது சீனின் வருகை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை அதிகரிக்கச் செய்துள்ளது.

    இந்த நான்காவது சீசனானது வரும் 27ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. முதல் ஏழு எபிசோடுகள் மட்டுமே மே மாதம் வெளியாகும் எனவும் மீதமுள்ள இரண்டு எபிசோடுகள் அடுத்த மாதம் வெளியாகும் எனவும் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பழைய ஸ்டரஞ்சேர்ஸ் திங்ஸ் சீசன்களை ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

    இந்தியாவினைப் பொறுத்த வரையில், மே மாதம் 27ம் தேதி மதியம் 12:30 க்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முடிந்தது ஐபிஎல் லீக் போட்டிகள்; ஆறுதல் வெற்றி பெற்ற பஞ்சாப்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....