Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுமுடிந்தது ஐபிஎல் லீக் போட்டிகள்; ஆறுதல் வெற்றி பெற்ற பஞ்சாப்..

    முடிந்தது ஐபிஎல் லீக் போட்டிகள்; ஆறுதல் வெற்றி பெற்ற பஞ்சாப்..

    நேற்று நடந்து முடிந்த இறுதி ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைத்ரபாத் அணிகள் மோதின.

    மும்பையிலுள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங்கினைத் தேர்வு செய்தது.

    இதன்படி முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் அடித்தது. அணியில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 43 ரன்களும், ரோமரியோ ஷெஃபெர்ட் 26 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 25 ரன்களும், ஐடென் மார்க்ரம் 21 ரன்களும், திரிபாதி 20 ரன்களும் அடித்தனர்.

    பஞ்சாப் தரப்பில் ஹார்ப்ரீத் ப்ரார் மற்றும் நாதன் எல்லிஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ரபாடா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

    158 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 15.1 ஒவேரிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    அணியில் அதிகபட்சமாக லிவிங்ஸ்டன் 49 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் இருந்தார். ஷிகர் தவன் 39 ரன்களும், ஜானி பேர்ஸ்டோ 23 ரன்களும், ஜிதேஷ் சர்மா 19 ரன்களும் அடித்திருந்தனர்.

    சன்ரைசர்ஸ் தரப்பில் பாசல்ஹக் பரூக்கி 2 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர், சுச்சித் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் எடுத்தனர். சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகள் எடுத்த ஹார்ப்ரீத் ப்ரார்க்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.

    இந்த போட்டியுடன் ஐபிஎல் லீக் போட்டிகள் முடிவுக்கு வந்துள்ளது. 69வது போட்டியில் டெல்லி அணியினை மும்பை வீழ்த்தியதன் மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கு பெங்களூரு அணி தகுதி பெற்றுள்ளது.

    நாளை நடைபெறும் முதல் குவாலிபையர்  போட்டியில் முதலிடத்தில் உள்ள குஜராத் அணி இரண்டாம் இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் வெற்றி பெரும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் வீட்டில் செல்லப்பிராணி இருக்கிறதா… அப்போ இது உங்க கவனத்திற்கு..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....