Monday, March 18, 2024
மேலும்
  Homeஜோதிடம்இந்த வாரம் எப்படியிருக்க போகுது மக்களே.... மேஷம் முதல் கன்னி வரையிலான ராசி பலன்கள் இதோ!

  இந்த வாரம் எப்படியிருக்க போகுது மக்களே…. மேஷம் முதல் கன்னி வரையிலான ராசி பலன்கள் இதோ!

  பொதுப்பலன்:

  சந்திரன் இந்த வாரம் மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளில் பயணம் செய்கிறார். மிதுனம், கடகம், சிம்மம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை.

  மேஷ ராசி அன்பர்களே…

  பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டிய வாய்ப்பு வரும். தவறவிடாதீர்கள். எந்தக் காரணம் கொண்டும் வெளிப் பெண்களிடம் நெருக்கமாகப் பழகாதீர்கள். அது வில்லங்கத்தில் கொண்டு போய்விடும்.

  குருபகவானின் சுபப் பார்வையால் தடைப்பட்டு நின்ற வீட்டு வேலைகள் மளமளவென்று நடக்கும். நீண்டகாலமாக துன்பப்படுத்தி வந்த மூட்டு வலிக்குத் தீர்வு கிடைக்கும்.

  நகைச்சுவையாக பேசுகிறோம் என்ற பெயரில் மனைவியின் மனதைக் காயப்படுத்தாதீர்கள். ஏழாம் இடத்தில் இருக்கும் கேது உறவினர்கள் வகையில் செலவுகளைக் கொண்டுவருவார். மங்கல நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும்.

  ரிஷப ராசி அன்பர்களே…

  வருமானம் திருப்தி தரும். சிறிது சேமிக்கவும் முடியும். உறவினர்கள் வருகையால் தடைப்பட்ட சுப நிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும். மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாக கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கி, சுமுகமான உறவு ஏற்படும்.

  புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சிலருக்குக் குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். முக்கியமான ஒரு பிரச்சனையை சமயோசிதமாகத் தீர்த்து நிர்வாகத்தினரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

  குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்குத் தேவையான பணம் இருப்பதால் சிரமம் எதுவும் இருக்காது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

  மிதுன ராசி அன்பர்களே…

  அனுகூலமான வாரமாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். உறவினர் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். ஆனால், உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.

  கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு மறைந்து அந்நியோன்யம் அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை நன்கு யோசித்து எடுப்பது நல்லது. அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை.

  குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு நிம்மதியான வாரம். வியாபாரத்தை விரிவுபடுத்த அல்லது வேறு இடத்துக்கு மாற்றும் முயற்சிகள் சற்று இழுபறியாக இருக்கும் என்பதால் பொறுமை அவசியம்.

  கடக ராசி அன்பர்களே…

  சுப காரியங்களில் தடைகள் விலகி சொந்தங்கள் கூடி வருவார்கள். பிள்ளைகளிடம் அதிகாரம் காட்டாமல் அன்பாக இருங்கள். வீடு மனைகளை புதுப்பிக்கவோ புதிதாக வாங்கவோ வாய்ப்பு கிடைக்கும். சட்டச் சிக்கலில் இருந்த நிலம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் முடிவுக்கு வரும்.

  பங்குச்சந்தை வர்த்தகங்கள் ஏற்றமாக இருக்கும். சனி பகவான் 8-ஆம் இடத்தில் இருக்கிறார். எதிர்பாராத விபத்துக்கள் ஏற்படலாம். ரத்த காயங்கள் உண்டாகலாம். வாகனங்களில் செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள். பணவரவை அதிகபடுத்துவார். கொடுத்த கடனைத் திரும்பப் பெறுவீர்கள்.

  சிம்ம ராசி அன்பர்களே…

  ஆசைப்பட்ட வேலை அமையவில்லையே என்று ஆதங்கப்பட்ட உங்களுக்கு நல்ல செய்தி வரும். தொழிலை நிலை நிறுத்தி முக்கிய இடத்தைப் பிடிப்பீர்கள். ஊழியர்கள் கடின உழைப்புக்கு ஏற்ற சன்மானம் பெறுவார்கள்.

  கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உருவாகும். அடுத்தவர்களின் பேச்சைக் கேட்டு அவசர முடிவு எடுக்காதீர்கள். குடும்பத்தில் குழப்பம் விளையும். விட்டுக்கொடுத்துப் போங்கள். கெட்டுப் போக மாட்டீர்கள்.

  வேலையிடத்தில் வெட்டிப்பேச்சு பேசாதீர்கள். எதிர்காலம் குறித்து தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். சகோதர சகோதரிகளுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வீர்கள்.

  கன்னி ராசி அன்பர்களே…

  பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. எதிர்பாராத பண வரவுக்கும் சாத்தியம் உள்ளது. சகோதர வகையில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகளும் கசப்பு உணர்வுகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

  தாயாரின் உடல்நலனில் கவனம் செலுத்தவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படும்.

  குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு சற்று சிரமமான வாரம் என்றே சொல்ல வேண்டும். பிள்ளைகள் மூலம் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.

  வீட்டை தூய்மையாக வைத்துக் கொள்ள என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....