Monday, March 18, 2024
மேலும்
    Homeஜோதிடம்இந்த வாரம் எப்படியிருக்க போகுது மக்களே…. துலாம் முதல் மீனம் வரையிலான ராசி பலன்கள் இதோ!

    இந்த வாரம் எப்படியிருக்க போகுது மக்களே…. துலாம் முதல் மீனம் வரையிலான ராசி பலன்கள் இதோ!

    துலாம் ராசி அன்பர்களே..

    கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். சிரமமான நேரங்களில் நண்பர்கள் உதவி செய்வார்கள். பழைய கடன்களைத் தந்து முடிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பணவரவு போதுமான அளவு இருக்கும். செலவுகளும் அளவாகவே இருக்கும்.

    குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு திருப்திகரமான வாரம். கணவரின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும். உறவினர்கள் அனுசரணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி இணக்கமான சூழ்நிலை உண்டாகும். விற்பனையும் லாபமும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும்.

    புதிய வேலைக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பணவரவு போதுமான அளவு இருக்கும். செலவுகளும் அளவாகவே இருக்கும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

    விருச்சிக ராசி அன்பர்களே…

    குடும்பத்தில் கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு மனஸ்தாபங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஒருவரையொருவர் அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். பணவரவைப் பொறுத்தவரை பிரச்சனை எதுவும் இல்லை.

    உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவதில் சற்று அலைச்சல் ஏற்படும். சிலருக்கு தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் பொறுமையாக இருக்கவேண்டிய வாரம். வேலைக்குச் சென்று வரும் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.

    அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருந்தாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிவு உண்டாகக் கூடும் என்பதால் பொறுமை அவசியம். விற்பனையும் சுமாராகத்தான் இருக்கும்.

    தனுசு ராசி அன்பர்களே…

    குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்திருக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும், சமாளிக்கும் அளவுக்குப் பணவரவு இருக்கும்.

    வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்கக் கூடுதல் உழைப்பு தேவை. சக வியாபாரிகளால் மறை முகத் தொல்லைகள் ஏற்பட்டாலும், பாதிப்பு எதுவும் இருக்காது.

    வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும். அதிகாரிகள் அவ்வப்போது கண்டிப்பு காட்டுவார்கள்.

    வாரப் பிற்பகுதியில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி யுடன் ஆதாயமும் தருவதாக இருக்கும். திருமணத்துக்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். சிலருக்கு தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும்.

    மகர ராசி அன்பர்களே…

    குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு மனதை சஞ்சலப்படுத்தும். கணவருடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு.

    குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த சிறுசிறு பிரச்னைகள் நீங்கி, மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்திருக்கும். தாயின் தேவைகளைப் பூர்த்தி செய்து, மகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். சிலருக்குக் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

    வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். ஒரு சிலருக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைப்பதற்குமான சந்தர்ப்பம் கனிந்து வரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் பிரச்னை எதுவும் இருக்காது. வாடிக்கையாளர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.

    கும்ப ராசி அன்பர்களே…

    வேலையிடத்தில் வெற்றிகரமாக திறமையை வெளிப்படுத்துவீர்கள். உங்கள் மனம் போல் பணி மாற்றம் ஏற்படும். உங்களுக்கு எதிரானவர்களை அடையாளம் கண்டுபிடித்து விலக்கி வைக்க வேண்டும்.

    குரு மங்கள யோகம் என்ற அற்புதமான அம்சத்தில் உள்ளனர். நீண்டகாலமாக இழுபறியாக இருந்த நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள் முடிவடையும். முடங்கி கிடந்த தொழில் முன்னேற்றமாக நடக்கும். அயல்நாட்டு வர்த்தகங்களில் நம்பிக்கை ஒளி பிறக்கும். முடங்கி கிடந்த தொழில் முன்னேற்றமாக நடக்கும்.

    வியாபாரம் அதிகரித்து லாபம் படிப்படியாக உயரும். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனையைக் கேட்டு நடப்பார்கள். அறிவுத் திறமையை அதிகாரிகள் பாராட்டுவார்கள்.

    காதல் கனிந்து வரும். உங்கள் ராசியில் சனி அமர்ந்திருக்கிறார். உறவுகளில் ஏதேனும் விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் நடக்கலாம். உங்கள் பேச்சை புரிந்து கொள்ளாமல் இல்லத்தரசிகள் மனவருத்தம் அடைவார்கள்.

    ஆன்லைன் வர்த்தகங்கள் சீராக நடக்கும். வியாபாரம் விருத்தியாகும். தடைகள் விலகிப்போகும். கேது ஒன்பதாம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். வெளி வட்டாரங்களில் உங்கள் செல்வாக்கு உயரும்.

    மீன ராசி அன்பர்களே…

    உங்கள் பொறுப்பை நீங்களே ஏற்று செய்யுங்கள். எதிர்கால முன்னேற்றத்திற்கு அஸ்திவாரமாக அமையும். வீடு கட்டுவதற்கான முயற்சி மேற்கொள்வீர்கள். சகோதர உறவுகளில் இருந்த சங்கடங்கள் விலகி போகும். அரசுத்துறையில் அபாரமான சாதனையைச் செய்வீர்கள். ஆசிரியர்களின் வாழ்க்கை தரம் முன்னேற்றம் அடையும்.

    குரு பகவான் சொந்த வீட்டில் இருக்கிறார். புதிய ஒப்பந்தங்கள் உங்களைத் தேடிவரும். உங்களின் வாக்குத் திறமையால் வியாபாரத்திற்கு தேவையான உதவிகளைப் பெறுவீர்கள்.

    வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். ஆன்லைன் வர்த்தகங்களில் அதிகத் தொகையை போட வேண்டாம். ஆடல் பாடல் போன்றவற்றில் மாணவர்கள் அற்புத சாதனை படைப்பார்கள். அழகு நிலையம் நடத்துகிறவர்கள் அதிக லாபம் அடைவார்கள்.

    அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஐடி துறை ஊழியர்கள் அதிக நேரம் கண் விழித்து வேலை பார்ப்பார்கள். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போங்கள். வெளியிட கோபங்களை வீட்டுக்குள் காட்டாதீர்கள். மனநிம்மதியை பறித்துவிடும்.

    இந்த வாரம் எப்படியிருக்க போகுது மக்களே…. மேஷம் முதல் கன்னி வரையிலான ராசி பலன்கள் இதோ!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....