Monday, March 18, 2024
மேலும்
  Homeவாழ்வியல்அழகுக் குறிப்புசமையல் அறையில இதெல்லாம் பண்ணுங்க; வேலை இன்னும் சுலபமா ஆகிடும்!

  சமையல் அறையில இதெல்லாம் பண்ணுங்க; வேலை இன்னும் சுலபமா ஆகிடும்!

  வீட்டில் இருக்கும் இடங்களில் மிகவும் முக்கியமான இடம் சமையலறையாகும். காலை எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை பெண்கள் அதிகமாக இருப்பது சமையல் அறையில் தான். சமையலறையை பெண்களுக்கான தனி உலகம் என்றும் சொல்லலாம்.

  சமையலறையில் செய்ய வேண்டிய வேலைகளை சுலபமாக்க சில எளிய குறிப்புகளை பெண்கள் தெரிந்து வைத்துக்கொண்டால் போதும். கடினமான வேலைகளையும் சுலபமாக செய்திடலாம். அவ்வாறு பெண்களின் வேலையை சுலபமாக்கும் பத்து பயனுள்ள குறிப்புகளை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

  குறிப்புகள்: 
  •  வாழைக்காய், கத்திரிக்காய் போன்ற காய்கறிகள் நீங்கள் சமைக்கும் பொழுது கடைசியாக தான் வெட்டி வைக்க வேண்டும், இல்லை என்றால் அதன் மீது காற்றுபட்டு அதன் நிறம் கருப்பாக மாறிவிடும். அதற்கு பதிலாக ஒரு டீஸ்பூன் மோர் கலந்த தண்ணீரில் கத்திரிக்காய் மற்றும் வாழைக்காய்களை வெட்டி வைத்தால் நிறம் அப்படியே மாறாமல் இருக்கும்.
  •  சமையல் செய்ய பயன்படும் மசாலா பொருட்களை போட்டு வைக்கும் கண்ணாடி பாட்டில்களை சுத்தப்படுத்தி தேவையான நேரத்தில் உபயோகப் படுத்துவதற்காக அதிக நாட்கள் அப்படியே எடுத்து வைத்து விடுவோம். சில நாட்கள் கழித்து அந்த பாட்டிலை எடுக்கும் பொழுது அதில் ஒருவித வாசனை வரும். இதனை தவிர்க்க சிறிதளவு செய்தித்தாள் அல்லது காகிதத்தை நன்றாகச் சுருட்டி இந்த பாட்டிலினுள் போட்டு வைத்தால் இவ்வாறான கெட்ட மணம் வீசாமல் இருக்கும்.
  • வீட்டில் கரண்ட் இல்லாமல் போனால் நமக்கு வெளிச்சம் தர உதவும் மெழுகுவர்த்தியை கடையிலிருந்து வாங்கி வந்த உடனே ஃப்ரிட்ஜில் ஃபீரிசருக்கு அடியில் இருக்கும் ட்ரேவில் வைத்துவிட வேண்டும். இவ்வாறு செய்வதால் மெழுகுவர்த்தியில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். இவ்வாறு ஃப்ரிட்ஜில் வைத்த மெழுகுவர்த்தியை ஏற்றும் பொழுது அரை மணி நேரம் எரியும் மெழுகுவர்த்தி கூட தொடர்ந்து ஒரு மணி நேரம் நின்று எரியும்.
  • புதினா, மல்லி மற்றும் கறிவேப்பிலைகளை எப்பொழுதும் தண்டுடன் அப்படியே வைக்கக்கூடாது. கழுவி நன்கு ஃபேன் காற்றில் காய வைத்த பின் இலைகளை மட்டும் கிள்ளி ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் ஸ்டோர் செய்து வைத்தால் போதும், ஒரு வாரம் வரை அப்படியே ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
  •  வீட்டில் தலைக்கு தேய்க்கும் தேங்காய் எண்ணெயை அதிக நாட்கள் அப்படியே வைத்திருந்தால் அதில் ஒரு வித வாடை வர ஆரம்பிக்கும். தேங்காய் எண்ணெய் வாங்கி வந்த உடனே ஒரு ஸ்பூன் மிளகை அதனுள் போட்டு வைத்து விட்டால் இவ்வாறான வாடை வருவதைத் தவிர்க்க முடியும்.
  சமைக்கும் பொழுதில்..
  • வெஜ் பிரியாணி, தேங்காய் பால் சாதம் போன்றவற்றை சமைக்கும் பொழுது இஞ்சி பூண்டு கூடவே சேர்த்து பச்சை மிளகாய் மற்றும் புதினா இலைகளையும் அரைத்து வைத்துக் கொண்டால் சாப்பிடும் பொழுது இடையிடையே புதினா தட்டுப்படாமல் இருக்கும், மேலும் புதினாவின் முழு சத்தும் நமக்கு கிடைக்கும். உணவின் சுவையும் அதிகரிக்கும்.
  •  வீட்டில் அசைவம் சமைக்கும் பொழுது அவற்றை என்னதான் சுத்தமாக கழுவினாலும் சில சமயம் அவற்றில் இரத்த வாடை வந்து கொண்டு தான் இருக்கும். இதற்காக சிறிதளவு உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை இதனுடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி வைத்து 20 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு, அதன் பின் சமைப்பதற்கு முன்பு அந்த நீரை வடிகட்டி சமைக்க ஆரம்பிக்கலாம். இவ்வாறு செய்வதால் அதிலிருந்து இரத்த வாடை வராமல் இருக்கும்.
  •  தோசை மாவு அரைத்து அதனை ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் காலை எடுக்கும்பொழுது மாவு முழுவதும் பொங்கி ஃப்ரிட்ஜில் வழிந்திருக்கும். இதனை தவிர்ப்பதற்கு வாழை இலையை சிறிய துண்டாக வெட்டியெடுத்து மாவின் மீது கவிழ்த்தி வைத்து விட்டால் போதும். மாவு இவ்வாறு பொங்கி வழியாமல் இருக்கும்.
  •  சமையலில் தாளிக்க கடுகு சேர்க்கும் பொழுது வெடித்து எல்லா பக்கமும் சிதறுகிறதா? அப்படி என்றால் நீங்கள் கடுகு போட்ட பின் கொஞ்சம் ஒரு சிட்டிகை அளவிற்கு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். கடுகு வெடித்தாலும் மேலே எழுந்து சிதறாது. மஞ்சள் தூளின் பச்சை வாசமும் எண்ணெயில் போய்விடும்.
  • தண்ணீரில் வெங்காயத்தை இரண்டாக வெட்டி ஊற வைத்து பின்னர் வெட்டினால் வெங்காயத்தில் இருக்கும் காரம் நீங்கி கண்களில் கண்ணீர் வராமல் இருக்கும்.

  77 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைவான வெப்பநிலையினை பதிவு செய்த பெங்களூர்!!

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....