Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்பராமரிப்புவீட்டை தூய்மையாக வைத்துக் கொள்ள என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?

    வீட்டை தூய்மையாக வைத்துக் கொள்ள என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?

    கோடை காலம் வந்தாலே வீட்டை பராமரிப்பது பெரிய வேலையாக இருக்கும். குழந்தைகளுக்கு விடுமுறை காலம் என்பதால் எதையாவது எடுத்து கலைத்துப்போட்டு வேலை வைத்துக்கொண்டே இருப்பார்கள். கோடையில் வீட்டில் உள்ள பொருட்களை சுத்தம் செய்வது குறித்து வீடு பராமரிப்பார்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

    1. காலை எழுந்தவுடன் மெத்தை, தலையணை ஆகியவற்றை ஒழுங்குபடுத்துங்கள். (இதுவும் ஒரு வகை உடற்பயிற்சிதான்)

    2. குழந்தைகளுக்கு அவர்களின் விளையாட்டு பொருட்களை வைக்கவும், புத்தகங்களையும் வைத்துக் கொள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தை ஒதுக்குங்கள். அவர்களின் பொம்மைகளை எடுத்து விளையாடிய பின் அந்த இடத்திலேயே வைக்க பழக்குங்கள். அப்படி அவர்கள் செய்யும் பொது பாராட்டவும் தயங்காதீர்கள்.

    3. துவைக்க வேண்டிய துணிகளையும், துவைத்த துணிகளையும் வேண்டிய இடத்தில் சேர்க்க குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பழக்குங்கள்.

    4. நம் அனைவரின் வீட்டையும் பெரிதும் ஆட்கொள்வது கடைகளில் இருந்து வரும் கவர், பேக்கிங் உபயோகித்த காகிதங்கள், துணிகள் வரும் மெல்லிய அட்டை பெட்டிகள், வார நாளிதழ்கள், செய்திதாள், உபயோகமற்ற/உடைந்த பொருட்கள். இவற்றை எப்படி கையாள்வது என்று தீர்மானித்துவிட்டாலே போதும், நீங்கள் முக்கால் கிணறு தாண்டிவிடுவீர்கள்.

    5. வீட்டை அடிக்கடி சுத்தம் செய்தால், நம் வீட்டு செல்வம் போய்விடும் என்று கூற கேட்டுருப்போம். ஆனால், உண்மையில் சுத்தம் செய்யவில்லை என்றால் தான் செல்வம் வீட்டை விட்டு போய்விடும்.

    நம் வீட்டில் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களும் 90 நாட்கள் வரை உபயோகப்படுத்தலாம் விட்டு விட்டால் அந்த பொருளானது எதிர்மறை ஆற்றலை ஏற்படுத்தும் எனவே தேவையில்லாத பொருளை வெளியேற்றுவதும் அல்லது அதை அசைத்தாவது விடவேண்டும்.அதற்குதான் நம்முன்னோர்கள் அமாவாசை பௌர்ணமி போன்ற நாளில் ஒரு நாள் முன்னரே ஒட்டடை போன்ற தூய்மை பணிகளை செய்தார்கள்.

    6. இரவு தூங்க செல்லுமுன், 15 நிமிடங்கள் ஒதுக்கி இவற்றை செய்ய தொடங்கி பாருங்கள்.

    தொலைக்காட்சி பெட்டியை அணைத்துவிட்டு ரிமோட் அதன் இடத்தில் வைத்து விடுங்கள்.
    தேவை இல்லாமல் தொங்கி கொண்டிருக்கும் மொபைல் சார்ஜ்ர் அப்புறப்படுத்தி ஒரு சார்ஜிங் டாக்ல வைத்துவிடுங்கள்.

    நாளை உடுத்த போகும் துணிகளை எடுத்து தனியே வைத்துவிடுங்கள்.நாளை காலை என்ன சமைக்க போகிறீர்கள் என தீர்மானித்து அவற்றிற்கு தேவையானவை இருக்கிறதா என சரிபார்த்து கொள்ளுங்கள்.

    காலை குறித்த நேரத்தில் விழித்தெழ அலாரம் வைத்து போனை கொஞ்சம் தூரத்தில் வையுங்கள். இதனால் தேவையில்லாத டென்ஷன் ஏற்படாது. நேரமும் மிச்சம் ஆகும்.

    தனியாளாக இல்லாமல் குடும்பமாய் அனைவரும் சிறிது மெனக்கெட்டால், உங்கள் வீட்டை அழகாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்வது மிகவும் எளிதாகிவிடும். முயற்சித்து பாருங்கள்.

    விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் – குரங்கு அம்மை வைரஸ்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....