Monday, March 18, 2024
மேலும்
  Homeவாழ்வியல்அழகுக் குறிப்புவெந்தயத்தை சமையலுக்கு மட்டும்தான் யூஸ் பண்ணணுமா என்ன? ; படிச்சு பாருங்க, அசந்துப்போவீங்க!

  வெந்தயத்தை சமையலுக்கு மட்டும்தான் யூஸ் பண்ணணுமா என்ன? ; படிச்சு பாருங்க, அசந்துப்போவீங்க!

  வெந்தயம் ஃப்ளேவினாய்டு, அல்க்லாய்டு, விட்டமின், மினரல் என பல சத்துக்களை பெற்றது. அனிமியா இருப்பவர்கள், அதிக பித்த உடம்பு உள்ளவர்கள் வெந்தயத்தை கீரையாகவோ, பருப்பாகவோ சாப்பிட்டு வந்தால் ரத்தம் விருத்தியாகும். குளிர்ச்சி உண்டாகும்.

  இப்படிப்பட்ட வெந்தயம் சருமத்தில் உண்டாகும் பிரச்சனைகளை எபப்டி போக்குகிறது என்பதை இக்கட்டுரையில் காண்போம்:

  சரும சுருக்கங்கள் அகற்ற:

  வெந்தயத்தை ஒரு கைப்பிடி அளவு எடுத்துகொண்டு அதனோடு 5 மடங்கு கப் அளவுநீர் விட்டு 10 நிமிடங்கள் ஊறவிட வேண்டும். பிறகு அதை அடுப்பில் மிதமான தீயில் வைத்து இலேசாக் சூடேற்றி வடிகட்டி வைத்து கொள்ளவும். இந்த நீரை கொண்டு முகத்தை கழுவ வேண்டும். தினமும் இப்படி செய்துவந்தால் சரும சுருக்கங்கள் மறையும்.

  தழும்புகள் மறைய :

  பருக்களால் உண்டாகும் கரும்புள்ளிகள், வடுக்கள், தழும்புகள் போன்றவற்றை முழுவதுமாக நீக்க சில காலம் பிடிக்கும் என்றாலும் தொடர்ந்து இதை செய்து வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

  வெந்தயத்தை தேவையான அளவு இரவு ஊறவைக்க வேண்டும். காலையில் அந்த நீரோடு வெந்தயத்தை வேகவைக்க வேண்டும். பிறகும் நீரை வெளியேற்றாமல் அதை கொண்டே வெந்தயத்தை அரைத்து முகம் மற்றும் உடலில் தழும்புகள் இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். 30 முதல் 40 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். தினமும் இதை செய்து வர வேண்டும்.

  இதனால் முகப்பருக்கள் இருந்தாலும் கரும்புள்ளிகள் இருந்தாலும் தழும்புகளோடு அவையும் மறையக்கூடும். இதை தொடர்ந்து செய்துவந்தால் 2 வாரங்களில் பலன் தெரியும். நேரமில்லாதவர்கள் இரவு நேரங்களில் இதை செய்துவரலாம்.

  முதுமை தோற்றத்தை மாற்ற மற்றும் நிறம் அதிகரிக்க:

  சுருக்கம் மற்றும் தளர்ந்த சருமம் இருந்தால், ஊறிய வெந்தயத்துடன் தேன் சேர்த்து அரைத்து முகத்தில் போடுங்கள். முகம் இறுகி இளமையான சருமம் பெறலாம்.

  வெந்தயத்தில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட் தன்மைகள் நமது தோல் வயதான தோற்றத்தை சருமம் எட்டாமல் தள்ளிபோடும். முகத்தில் மென்மை கூட வேண்டும் என்று நினைப்பவர்கள் வெந்தயத்துடன் தயிர் சேர்த்து பேஸ்ட் போல் குழைத்து தடவி பயன்படுத்தினால் முகம் மிருதுவாக இருக்கும்.

  வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து அதனுடன் சிறிது தயிர் கலந்து முகத்தில் பேக் போல் போடுங்கள். 20 நிமிடம் கழித்து கழுவுங்கள். வெயிலினால் நிறம் மங்கியிருந்தால் மீண்டும் பழைய நிறம் பெறுவீர்கள்.

  தழும்புகள் இழந்த நிறம் பெறுவதற்கு :

  முகத்தில் தழும்புகளின் தடம் தெரியும் போது இவை அழகை கெடுத்துவிடும். சிலருக்கு மேக் அப் பயன்படுத்திய பிறகும் கூட சருமத்தில் தழும்புகள் தனியாக தெரியும். இவர்கள் வெந்தயத்தை நீரில் ஊறவைத்து அப்படியே பேஸ்ட் போல் குழைத்து அதில் வைட்டமின் இ அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து முகம் முழுக்கவே தடவலாம்.

  இதனால் தழும்புகளால் மங்கிய இடமும் பளிச்சென்று இருக்கும். கூடுதலாக கண்களுக்கு கீழ் கருவளையம் இருந்தாலும் அவையும் மறையும். கருமையும் மறையும். வாரம் மூன்று முறையாவது இப்படி செய்துவரவேண்டும்.

  வெந்தயத்தின் இலைகளும் பலன் தரும்:

  வெந்தய இலைகள் வெந்தய விதைகளைப் போன்று நன்மை செய்யகூடியது. வெந்தய இலைகள் தழும்புகளை சற்று வேகமாக போக்கவும் கூடியது என்று சொல்லலாம். வெந்தய இலைகளை அப்படியே நீர் சேர்த்து அரைத்து முகத்தில் கரும்புள்ளிகள் தழும்புகள் இருக்கும் இடத்தில் தடவி உலரவிடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி எடுக்கவும்.

  இவை தழும்புகளை மறைக்க செய்வதோடு முகம் வறட்சியடையாமல் தடுக்கிறது. முகத்தின் நீர்ச்சத்தை தக்க வைக்க உதவுவதால் சருமத்தின் வேறு பிரச்சனைகள் வராமல் காக்கிறது.

  ‘சீமான் ஒரு பாலியல் குற்றவாளி’ – எம்.பி ஜோதிமணி விளாசல்..

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....