Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇந்தியாவில் சரசரவென உயர்ந்து நிற்கும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த......

    இந்தியாவில் சரசரவென உயர்ந்து நிற்கும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த……

    இந்தியாவில் சரசரவென உயர்ந்து நிற்கும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் இருந்த ஒரே வழி பெட்ரோல், டீசல் விலை குறைப்புதான் என்றும் இந்த விலை குறைப்பு உடனடியாக நாடு முழுவதும் எல்லா நுகர்வோர் பொருட்களிலும் எதிரொலிக்கும் என்றும் சொல்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

    பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதன்மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறையும் எனவும் தெரிவித்துள்ளார்.

    பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயைக் கடந்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் விலைவாசி கட்டுப்பாட்டை இழந்து உயர்ந்து, அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு வந்ததால், அங்கு பொருளாதார நெருக்கடி உண்டாகியுள்ளது.

    உலகின் பல்வேறு வளர்ந்த நாடுகளில் கூட விலைவாசி ஏற்றம் சாமானிய மக்களை சிரமப்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக உணவுப் பொருட்கள், இதர நுகர்வோர் பொருட்கள் என எல்லா பொருட்களின் விலையும் அதிகரித்தது.

    பொருளாதார நிபுணர் கருத்து:

    தற்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள விலை குறைப்பு ஒருபுறம் மக்களுக்கு பலன் தரும் என்றாலும், அதேநேரம், இந்த விலை குறைப்பை பற்றி பொருளாதார நிபுணர் கருத்து என்னவென்று பார்ப்போம்.

    முதலீட்டு ஆலோசகர் நாகப்பன் அவர்கள் கூறுகையில்: பெட்ரோல், டீசல் விலை குறைப்பால் உடனடியாக நுகர்வோர் பொருட்களின் விலை குறையும் என்பதில் சந்தேகமில்லை என்கிறார். ” தற்போது மத்திய அரசிடம் உள்ள ஒரே உடனடி தீர்வு இதுதான். கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவில் விலைவாசி உயர்ந்துள்ளது. பெட்ரோலின் விலை குறைவதால், காய்கறிகள், மளிகை பொருட்கள் என பல நுகர்வு பொருட்களின் விலையில் மாற்றங்கள் ஏற்படும். இந்த விலை குறைப்பு ஓரளவு விலைவாசியைக் கட்டுப்படுத்தும்.”

    மேலும், ”கடந்த முறை மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்ததால், ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாயை இழந்ததாக கூறியிருந்தது. தற்போதும் அதேபோல விலை குறைப்பால், ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாயை இழக்கவுள்ளது. இதுபோன்ற இழப்பீடுகளை உடனடியாக சரிகட்ட முடியாது. ஆனால், சமீப காலங்களில் மத்திய அரசு பிற வரிகளை உயர்த்தியது. அதன் மூலம் வந்த வரிகள் நாட்டின் வருவாய்க்கு ஓரளவு உதவும்.”

    பெட்ரோல் விலையை மேலும் சீரமைப்பது பற்றி மத்திய அரசு ஆலோசனை செய்யவேண்டும் என்கிறார் நாகப்பன். ”உஜ்வாலா திட்டத்தில் காஸ் சிலிண்டர் வாங்கியவர்களுக்கு ரூ.200 மானியம் தர மத்திய அரசு தீர்மானித்துள்ளது. அதேபோல, பெட்ரோல் விலையில், இருசக்கர வாகனம் வைத்துள்ளவர்களுக்கு மானியம் தருவதை பற்றி அரசு யோசிக்கலாம்.

    நடுத்தர மக்கள்தான் விலைவாசி ஏற்றத்தால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால், இந்த மானியத்தை அளித்தால், பலருக்கும் அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு பணம் மிச்சப்படும். தற்போது பெட்ரோல் விலை குறைந்தால், அது உயர்தர வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கும் சென்று சேர்வதில் நியாயம் இல்லை,” என்கிறார் பொருளாதார நிபுணர் நாகப்பன்.

    இலங்கை போன்ற பொருளாதார நெருக்கடியில் இந்தியா சிக்குமா?

    இலங்கையில் ஏற்பட்டுள்ளது போன்ற பொருளாதார நெருக்கடி இந்தியாவில் வருவதற்கு வாய்ப்புள்ளதா என கேட்டபோது, ”இந்தியாவை இலங்கையுடன் ஒப்பிட முடியாது. இங்கு தொழில் செய்யும் அல்லது வேலைக்கு செல்லும் இளம் தலைமுறையினர் அதிகமுள்ளனர். இதனால், இவர்கள் பல பொருட்கள், வீடு, வாகனம் வாங்குவது என்ற சங்கிலியில் அடுத்துவரும் 15-20 ஆண்டுகளுக்கு இருப்பார்கள். இதனால், பொருளாதாரத்தில் நமக்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்பு குறைவு என கூறியுள்ளார்.”

    முடிந்தது ஐபிஎல் லீக் போட்டிகள்; ஆறுதல் வெற்றி பெற்ற பஞ்சாப்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....