Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇந்தியாவையே உலுக்கிய 'விஸ்மயா' வழக்கு; வெளிவந்த அதிரடி தீர்ப்பு!

    இந்தியாவையே உலுக்கிய ‘விஸ்மயா’ வழக்கு; வெளிவந்த அதிரடி தீர்ப்பு!

    கேரளாவில் வரதட்சணைக் கொடுமையால் விஸ்மயா என்ற இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், அவரது கணவர் குற்றவாளி என கொல்லம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    கேரள மாநிலம் கொல்லம் கைததோடு பகுதியைச் சேர்ந்தவர் விக்ரமன் நாயர். இவரது மகள் விஸ்மயா வயது 24. ஆயுர்வேத கல்லூரியில் மருத்துவம் படித்த இவருக்கும் சஸ்தம்கோட்டா பகுதியைச் சேர்ந்த மோட்டார் வாகன பிரிவு உதவி ஆய்வாளரான கிரண்குமார் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது.

    ஆயுர்வேத மருத்துவம் இறுதியாண்டு பயின்று வந்த விஸ்மயாவை, 100 சவரன் நகை, ரூ.10 லட்சம் மதிப்புள்ள கார், ஒரு ஏக்கர் நிலம் உள்ளிட்டவற்றை வரதட்சணையாகக் கொடுத்து தான் கிரண்குமாருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்து உள்ளனர்.

    இவ்வளவு வரதட்சணை கொடுத்த பின்னரும், விஸ்மயா பெற்றோர் வாங்கித்தந்த கார் பிடிக்கவில்லை எனக்கூறி, ரூ.10 லட்சத்தை ரொக்கமாக தரக்கூறி, கிரண்குமார் கொடுமைப்படுத்தியுள்ளார்.

    இந்த நிலையில் கணவன் வீட்டில் கூடுதல் வரதட்சணை கேட்டு அடித்து கொடுமை படுத்தி வந்ததால் விஸ்மயா தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அவரது மரணம் சமூக ஊடகங்களில் விவாதங்களையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. விஸ்மயா ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலை மாணவி ஆவார்.

    விஸ்மயாவை அவரது கணவர் கிரண் குமார் வரதட்சணை கொடுமை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஜூன் 22 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதனிடையே கிரண் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    தற்கொலைக்கு ஒரு நாள் முன்பு, வரதட்சணைக்காக கிரண் குமார் தன்னை துன்புறுத்தியதாகவும், தனது உடலில் காயங்கள் ஏற்பட்ட புகைப்படத்தையும் விஸ்மயா வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்திருந்தார். கல்வியறிவு அதிகமுள்ள கேரள மாநிலத்தில் நிகழ்ந்த இந்த மரணம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதனால் கிரண் குமார் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்த நிலையில் அவர் மீதான குற்றசாட்டுகள் உறுதி செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து, ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த கிரண்குமாரை அரசு பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கி மாநில போக்குவரத்து துறை உத்தரவிட்டது.

    இந்த நிலையில், வழக்கை விசாரித்து வந்த கேரள நீதிமன்றம் கிரண்குமாரை குற்றவாளி என தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு நிலவியது. மேலும், இந்த வழக்கில் குற்றவாளி கிரண்குமாருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

    வந்துவிட்டது மாநிலங்களவைத் தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....