Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்வர்த்தகம்ஏற்றம் கண்ட பங்குச்சந்தைகள்; வியாழக்கிழமை நிலவரம்..

    ஏற்றம் கண்ட பங்குச்சந்தைகள்; வியாழக்கிழமை நிலவரம்..

    மூன்று நாட்களுக்குப் பிறகு இன்று பங்குச் சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளன.  சிலமாதங்களாக இந்திய பங்குச் சந்தைகள் மட்டுமல்லாது உலக வர்த்தகமே படுகுழியில் படுத்திருந்தது நாம் அனைவரும் அறிந்ததே.. இதற்கு பல கரணங்கள் இருந்தன.

    ரஷ்யா – உக்ரைன் போர், பண வீக்கம், வரி உயர்வு, கச்சா எண்ணெய் விலை உயர்வு, கச்சா என்னை விலை உயர்வினால் பெட்ரோல் டீசல்களின் விலை உயர்வு, வர்த்தகர்களிடையே நிலவிய அதிருப்தியான மனநிலை என்று இதற்கான காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

    இந்த நிலையில் சென்ற வாரத்திலிருந்து பங்குச் சந்தையானது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றது. கடந்த மூன்று நாட்களாக சரிந்த பங்குச்சந்தைகள் இன்று ஏற்றம் கண்டுள்ளன.

    பங்குச்சந்தை நேர முடிவில், சென்செக்ஸ் 503.27 புள்ளிகள் உயர்ந்து 54.252.53 ஆகவும், நிப்டி 144.40 புள்ளிகள் உயர்ந்து 16,170.20 ஆகவும் உள்ளது. பங்குச்சந்தைகள் இன்றைய உயர்வுகளுக்கு உலோகம், தகவல் தொழில்நுட்பம், ஆற்றல் மற்றும் வங்கி நிறுவனங்கள் துணை புரிந்துள்ளன.

    இன்று காலையில் உயர்ந்த பங்கு வர்க்கமானது மதிய நேரத்தில் சரிவடைந்தது குறிப்பிடத்தக்கது. மதியத்திற்குப் பிறகு நிகழ்ந்த அதிகப்படியான வர்த்தகத்தின் மூலம் இந்த ஏற்றத்தினை அடைந்துள்ளன.

    டாடா ஸ்டீல், ஜேஎஸ்டபுள்யூ ஸ்டீல், அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ், எஸ்பிஐ மற்றும் ஹெட்ச்டிஎஃப்சி போன்ற நிறுவனங்கள் இன்று அதிக ஏற்றத்தில் முடிவடைந்தன.

    சர்க்கரை தொடர்பான பங்குகளும் இன்று ஏற்றத்தில் முடிவடைந்துள்ள. ஐடிசி, யுபிஎல், டிவிஸ் லேப், சன் பார்மாட்டிக்கல்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அதானி போர்ட்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் போன்ற நிறுவனங்கள் இறக்கத்தினை சந்தித்துள்ளன.

    டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு இரண்டு பைசாக்கள் குறைந்து டாலருக்கு 77.57ஆக உள்ளது. தங்கத்தினைப் பொறுத்தவரை 22 காரட் தங்கமானது ஒரு கிராமிற்கு 25 ருபாய் குறைந்து 4,765 ரூபாய்க்கும், சவரனுக்கு 200 ருபாய் குறைந்து 38,120 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு 50 காசுகள் குறைந்து கிராம் 66 ரூபாய்க்கும், 8 கிராம் வெள்ளி 528 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

    யாஷ் நடிச்சாலே இனி அது பான்-இந்தியாதான்! ; கே.ஜி.எஃப் வெற்றியின் எதிரொலி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....