Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுவிசா முறைகேடு வழக்கு தொடர்பாக கார்த்திக் சிதம்பரம் நேரில் ஆஜராக உத்தரவு..!!

    விசா முறைகேடு வழக்கு தொடர்பாக கார்த்திக் சிதம்பரம் நேரில் ஆஜராக உத்தரவு..!!

    சிவகங்கை மாவட்டத்தின் எம்.பியான கார்த்திக் சிதம்பரம் சீன நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கு முறைகேடாக விசா பெற ருபாய் ஐம்பது லட்சத்தினை லஞ்சமாக வாங்கியதாக சிபிஐ அவர் மீது வழக்கு பதிவு செய்திருந்தது. 

    இந்நிலையில் கடந்த 18ம் தேதி அவரது ஆடிட்டராகிய பாஸ்கர ராமனை கைது செய்து போலீசார் விசாரித்து வந்தனர். 

    பஞ்சாபில் டிஎஸ்பிஎல் என்ற நிறுவனத்தின் அனல்மின் நிலையம் அமைப்பதற்கான பணிகளை சீன நிறுவனம் ஒன்று செயல்படுத்தி வருகின்றது. இந்த பணிகளில் ஈடுபடுவதற்காக 250க்கும் மேற்பட்ட சீன பணியாளர்களுக்கு விதிகளை மீறி விசா பெற்றுத்தர கார்த்திக் சிதம்பரம் உதவி செய்துள்ளதாய் கூறப்படுகிறது.

    இதற்காக கார்த்திக் சிதம்பரத்திற்கு ஐம்பது லட்சம் ருபாய் லஞ்சமாகக் கொடுக்கப்பட்டதாகவும்  சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது. இதற்கிடையில் உச்ச நீதிமன்றம் மற்றும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திடம் அனுமதி வாங்கி இங்கிலாந்து சென்றுள்ள கார்த்திக் சிதம்பரம் இன்று நாடு திரும்புகிறார்.

    இந்தியா வந்தடைந்த 16 மணி நேரத்தில் கார்த்திக் சிதம்பரம் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்னதாக 2017ம் ஆண்டு மே மாதம் கார்த்திக் சிதம்பரத்தின் மேல் சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்தது. இதன் படி அவர் மீது பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பொருளாதார குற்றங்கள் கண்காணிப்பு குழுவும் வழக்கினை பதிவு செய்தது.

    இந்த வழக்கு தொடர்பாக 2018ம் ஆண்டு கைது செய்யப்பட்ட கார்த்திக், ஒரு மாதத்தில் ஜாமினில் வெளிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் செய்துள்ள மோசடியானது அவரது தந்தை ப.சிதம்பரம் 2011ம் ஆண்டு மத்திய அமைச்சராக இருந்த போது செய்தது என்றும் சிபிஐ குறிப்பிட்டுள்ளது.

    ஒற்றைக் காலினை சிறுமிக்கு பரிசளித்த சோனு சூட்..!!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....