Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஒற்றைக் காலினை சிறுமிக்கு பரிசளித்த சோனு சூட்..!!

    ஒற்றைக் காலினை சிறுமிக்கு பரிசளித்த சோனு சூட்..!!

    ஒற்றைக் காலுடன் பள்ளிக்குச் சென்று வரும் சீமா என்ற பெண்ணிற்கு இன்னொரு கால் பொருத்துவதற்கான செலவினை பாலிவுட் நடிகர் சோனு சூட் ஏற்றுள்ளார்.

    சீமா என்ற குழந்தை ஒற்றை காலுடன் பள்ளிக்குச் செல்லும் காணொளி ஒன்று நேற்று ட்விட்டரில் வலம் வந்தது. ஒரு கிலோ மீட்டர் தூரம் ஒற்றைக் காலுடன் துள்ளி துள்ளி பள்ளிக்குச் செல்லும் அந்த சிறுமியின் மனவலிமையினை இணையத்தில் பலரும் பாராட்டி வந்தனர்.  

    இந்நிலையில், இந்த காணொளியினை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சமூக சேவகரும், பாலிவுட் நடிகருமான சோனு சூட் அந்த சிறுமிக்கு மற்றொரு கால் பொருத்துவதற்கு தான் உதவி செய்வதாய்க் கூறியுள்ளார்.

    ‘இனி சீமா பள்ளிக்கு துள்ளித் துள்ளி பள்ளிக்குச் செல்லலாம். ஒற்றைக் காலுடன் அல்ல இரண்டு கால்களுடன். சீமா இரண்டு கால்களில் நடக்கும் நேரம் வந்து விட்டது’ என்று பதிவிட்டுள்ளார்.

    சோனு சூட்டின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். கொரோனா காலகட்டத்தில் சோனு சூட் மக்களுக்கு பல பயனுள்ள உதவிகளை செய்திருந்தார்.

    பசியில் வாடிய மக்களுக்கு உணவுகள் அளித்தும், சொந்த ஊர்களுக்குச்செல்ல முடியாமல் தவித்த மக்களுக்கு தேவையான உதவிகள் செய்தும், கொரோனா உக்கிரமாய் இருந்த நிலையில் ஆக்சிஜன் சிலிண்டர், படுக்கைகள் இல்லாமல் நாடே திணறிய போது தன்னால் முடிந்த அளவு உதவிகளை சோனு சூட் செய்திருந்தார்.

    தான் செய்த உதவிகளின் மூலம் மக்களின் மனதில் இடம்பிடித்துள்ள சோனு சூட் ‘சூட் பவுண்டேஷன்ஸ்’ அமைப்பின் மூலம் கொரோனா காலகட்டத்திற்குப் பிறகும் தனது சமூகப் பணியினை செய்துகொண்டே வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் இன்று சீமா சிறுமிக்கு இன்னொரு கால் பொருத்துவதற்கான பொறுப்பினையும் ஏற்றுள்ளார்.

    சீமாவின் காணொளி பற்றி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கருத்து தெரிவித்துள்ளார்.

    ‘சீமாவின் இந்த பத்து வருட போராட்டம் என்னை நெகிழச்செய்கிறது. இந்த நாட்டில் உள்ள ஓவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி வேண்டும். எனக்கு அரசியல் தெரியாது. ஆனால் ஒவ்வொரு அரசாங்கமும் சிறப்பான கல்வியினைக் கொடுக்கத் தேவையான அளவு ஆதாரங்களைக் கொண்டுள்ளன. சீமாவின் இந்த செயல் தேசபக்திக்கு ஒரு எடுத்துக்காட்டு.’ என்று பதிவிட்டுள்ளார்.

    பட்டிதார்-ராகுல்; வெற்றிக்கான ஒரு போராட்டம்.. லக்னோவை வீழ்த்தியது பெங்களூரு..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....