Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமுதல் பெண் விமானி பதவியேற்பு; புலிக்கு பிறந்தது பூனையாகுமா?

    முதல் பெண் விமானி பதவியேற்பு; புலிக்கு பிறந்தது பூனையாகுமா?

    நம் ராணுவ விமானப் படையின் முதல் பெண் போர் விமானியாக கேப்டன் அபிலாஷா பராக் பயிற்சியை வெற்றி கரமாக முடித்து நேற்று பொறுப்பேற்றார். பிரிட்டன் ராணுவத்தின் ராயல் விமானப் படை, நம் நாட்டில் ராணுவ விமானப் பிரிவை 1942ல் துவங்கியது.

    இதன் முதல் விமானம் 1947ல் இயங்க துவங்கியது. நம் ராணுவத்துக்கான பிரத்யேக விமானப் படை 1986ல் துவக்கப்பட்டது. இதில், போர் விமானியாக பெண்கள் இருந்ததில்லை.இந்நிலையில், நம் ராணுவ விமான படையில் முதல் பெண் போர் விமானியாக அபிலாஷா பராக் நேற்று பொறுப்பேற்றார்.

    மராட்டிய மாநிலம் நாசிக்கில் உள்ள போர் விமானிகள் பயிற்சி பள்ளியில் ராணுவ போர் விமானிகளாக 36 பேருடன் அவரும் பயிற்சி முடித்துள்ளார். அவருக்கு பயிற்சி நிறைவு பதக்கத்தை ராணுவ வான்பாதுகாப்பு படை தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே.சூரி அணிவித்தார்.

    அபிலாஷா பராக், அரியானா மாநிலம், பஞ்ச்குலாவை சேர்ந்தவர். கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ராணுவ வான்பாதுகாப்பு படையில் சேர்ந்தார். இவரது தந்தை இந்திய ராணுவத்தில் காஷ்மீரில் கர்னலாக பதவி வகித்து ஓய்வு பெற்ற ஓம் சிங் ஆவார். ராணுவ வான்பாதுகாப்பு படையில் சேருவதற்கு முன்னர் கேப்டன் அபிலாஷா, தொழில் ரீதியில் நிறைய ராணுவ படிப்புகளை படித்துள்ளார். தந்தை வழியில் இந்த மகளும் நாட்டுக்காக ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுவதை அனைவரும் பாராட்டுகின்றனர்.

    இது குறித்து ராணுவ அமைச்சகத்தின் தகவல் தொடர்பு கூடுதல் இயக்குனர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இந்த நாள், இந்திய ராணுவ விமானப் படையின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். ராணுவ விமானப் படையின் முதல் பெண் போர் விமானியாக, கேப்டன் அபிலாஷா பராக் வெற்றிகரமாக பயிற்சி முடித்து பொறுப்பேற்றுள்ளார்” என்று கூறியுள்ளார்.

    பட்டிதார்-ராகுல்; வெற்றிக்கான ஒரு போராட்டம்.. லக்னோவை வீழ்த்தியது பெங்களூரு..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....