Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஇனி திருமணச் சான்றிதழை திருத்த சார்பதிவாளர் அலுவலகம் வேண்டாம்! - அப்போ, இதைப் படியுங்க!

    இனி திருமணச் சான்றிதழை திருத்த சார்பதிவாளர் அலுவலகம் வேண்டாம்! – அப்போ, இதைப் படியுங்க!

    திருமணம் செய்து கொள்ளும் ஆண், பெண் இருபாலரும் தங்களின் திருமணத்தை பதிவு செய்வது மிக அவசியமாகும். திருமணம் நடைபெற்ற மூன்று மாதங்களுக்குள், பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாகும். இந்த காலக்கெடுவையும் தாண்டி, தாமதப்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும். இந்நிலையில், திருமணத்தை பதிவு செய்வதில், தற்போது புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம் 2009 இன் படி, திருமணத்தை பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பதிவு செய்த சில தினங்களில், திருமணச் சான்றிதழ் கிடைத்து விடும். திருமண உறவில் இணையும் தம்பதிகள், தங்களின் திருமணத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அப்போது தான், தம்பதிகளின் திருமணம் சட்டப்படி செல்லும்.

    திருமணத்தை பதிவு செய்வது குறித்து, ஒவ்வொரு மதத்திற்கும் ஏற்றவாறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், சிறப்பு திருமணச் சட்டமும் அமலில் இருக்கிறது. இந்த திருமண சட்டங்களின் அடிப்படையில் தான், திருமணங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த திருமணப் பதிவானது, இதற்கு முன்னர் விருப்பத்தின் அடிப்படையில் தான் இருந்தது. பிறகு, கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணத்தை பதிவு செய்யும் சட்டத்தை கட்டாயமாக்கியது, தமிழக அரசு. திருமணம் நடந்து முடிந்த 90 நாட்களுக்குள் திருமணத்தை பதிவு செய்வது அவசியமான ஒன்றாகும். திருமணத்தை பதிவு செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்.

    அசல் ஆவணங்களுடன் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் சென்று தான் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும். திருமணச் சான்றிதழில் தவறுதலாக ஏற்படும் சிறுசிறு திருத்தங்களை சரிசெய்வதற்கு கூட, சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்று தான் திருத்தம் செய்ய வேண்டும். இந்நிலையை மாற்றி அமைப்பதற்கு, தமிழக அரசு புதிய நடைமுறையை தற்போது கொண்டு வந்துள்ளது. அதன்படி, திருமணச் சான்றிதழில் ஏற்பட்டுள்ள பிழையை இணையம் வழியாக திருத்தம் செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது தமிழக அரசு. இந்த புதிய வசதிக்கு அரசாணையை வெளியிடப்பட்டுள்ளது.

    தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளதால், திருமணச் சான்றிதழில் திருத்தம் செய்ய, இனி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரடியாக செல்வதை தவிர்த்து விடலாம். திருமணம் முடிந்த தம்பதிகள் https://tnreginet.gov.in/portal/ எனும் இணையதளத்தின் மூலம், பயனர் பதிவை உருவாக்க வேண்டும். பயனர் பதிவின் மூலம் உள்நுழைந்து, திருமணச் சான்றிதழில் உள்ள பிழையை திருத்திக் கொள்ளலாம்.

    இன்று எப்படி; பயணம் போகலாமா? சந்திராஷ்டமம் யாருக்கு? – இன்றைய ராசிபலன்கள் இதோ!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....