Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்மழைநீர் சேகரிப்பு தடுப்பணையில் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான இரும்பு கம்பிகள் திருட்டு; 3 பேரை...

    மழைநீர் சேகரிப்பு தடுப்பணையில் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான இரும்பு கம்பிகள் திருட்டு; 3 பேரை கைது செய்தது காவல்துறை

    புதுச்சேரியில் மழைநீர் சேகரிப்பு தடுப்பணையில் இருந்து இரும்பு கம்பிகளை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    புதுச்சேரி மணவெளி தொகுதி டி.என்.பாளையம் பகுதியில் மலட்டாறு பாலம் உள்ளது. இந்தப் பாலத்தில் புதுவை பொதுப்பணித்துறை நீர் பாசன பிரிவு மழை நீர் சேகரிப்பதற்காக தடுப் பணை அமைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவு இளநிலை பொறியாளர் ஸ்ரீநாத் தடுப்பணையை ஆய்வு செய்தார்.

    அப்போது தடுப்பணையில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான ஷட்டரில் இரும்பு கம்பிகள் அறுக்கப்பட்டு திருடு போனது தெரியவந்தது. இதனால் அதன்மூலம் தேக்கி வைக்கப்பட்டிருந்த நீரும் வெளியேறிவிட்டது. இது சம்பந்தமாக தவளக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் பிரபு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் தடுப்ப ணையில் இரும்பு கம்பிகளை திருடிய டி.என். பாளையம் புதுநகர் பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன், சூர்யா மற்றும் போஸ்தரன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் அப்பகுதி வீடுகளில் இருந்த 4 மின்மோட்டார்கள், மினி லாரியில் இருந்த பேட்டரி பொருட்களும் திருடியது தெரியவந்தது. இதையடுத்து ரூ.1லட்சம் மதிப்புள்ள அந்த பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மாற்றுத்திறனாளியுடன் நடிகர் விஜய்..வைரலாகும் புகைப்படம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....