Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமுற்றிலும் மறைந்து காணப்பட்ட தஞ்சை பெரிய கோயில்; காரணம் என்ன தெரியுமா?

    முற்றிலும் மறைந்து காணப்பட்ட தஞ்சை பெரிய கோயில்; காரணம் என்ன தெரியுமா?

    கடும் பனிப்பொழிவு காரணமாக தஞ்சை பெரிய கோயில் முழுவதும் மறைந்தது வியப்பை ஏற்படுத்தியது. 

    தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாகவே பரவலாக கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை முதலே கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. இதன் காரணமாக சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். 

    இதனிடையே உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் கடும் பனிப்பொழிவு காரணமாக முற்றிலுமாக மறைந்து காணப்பட்டது. இந்தக் காட்சியை கண்ட பலரும் வியப்புடன் வேடிக்கை பார்த்தனர். 

    thanjavur periya kovil

    மேலும், தற்போது சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஏற்ற காலம் என்பதால் பக்தர்கள் பலரும் பெரிய கோயிலின் அழகை காண சென்றனர். இந்நிலையில், கடும் பனிப்பொழிவு காரணமாக பெரிய கோயிலின் அழகை கண்டு ரசிக்க முடியாமல் காலையில் ஏமாற்றம் அடைந்தனர். 

    அதே சமயம், தலைநகர் சென்னையிலும் அதீத பனிப்பொழிவே நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    அரையிறுதிக்குச் சென்ற தமிழ் தலைவாஸ்.. வெற்றிப்பயணம் தொடருமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....