Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்இந்த ஆண்டின் டாப் 10 திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா? - வெளிவந்த தகவல்..

    இந்த ஆண்டின் டாப் 10 திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா? – வெளிவந்த தகவல்..

    இந்த ஆண்டு பிரபலமான இந்திய திரைப்படங்களின் பட்டியலை ஐஎம்டிபி தளம் வெளியிட்டுள்ளது. 

    ஐஎம்டிபி – திரைத்துறையை பொறுத்தவரையில் மிக முக்கிய தளமாக விளங்கி வருகிறது. 2022-ஆம் ஆண்டு முடிவடைவதையொட்டி, இத்தளமானது இந்த ஆண்டு பிரபலமான 10 இந்திய திரைப்படங்களின் பட்டியல்களை வெளியிட்டுள்ளது. 

    அதன்படி, ராஜமௌலி இயக்கி ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளிவந்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் இப்பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது. 

    இப்படத்தைத் தொடர்ந்து, தி காஷ்மிர் ஃபைல்ஸ் இரண்டாம் இடத்தையும் கேஜிஎஃப் – 2 திரைப்படம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது. மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தமிழ் திரைப்படமான விக்ரம் 4-ஆம் இடத்தையும், காந்தாரா 5-ம் இடத்தையும் பிடித்துள்ளது. 

    மாதவன் இயக்கி நடித்த ராக்கெட்ரி திரைப்படம் 6- ஆம் இடத்திலும், மேஜர் 7- ஆம் இடத்திலும் உள்ளன. இவற்றைத் தொடர்ந்து, 8-ஆவது இடத்தில் சீதா ராமம், 9-ஆவது இடத்தில் பொன்னியின் செல்வன் 10-ஆவது இடத்தில் சார்லியும் உள்ளன. 

    முன்னதாக, ஐஎம்டிபி தளம் பிரலமான நடிகர்கள் பட்டியலை வெளியிட்டது. அதில், தமிழ் நடிகர் தனுஷ் முதலிடத்தில் உள்ளார்.  தனுஷிற்கு அடுத்து பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் இடம்பெற்றுள்ளார். மேலும், ஐஸ்வர்யா ராய் 3-ஆவது இடத்தையும், தெலுங்கு நடிகர் ராம்சரன் 4-ஆவது இடத்தையும், சமந்தா 5-ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர்.

    மேலும், அந்த பட்டியலின் 6-ஆவது இடத்தில் ஹிருத்திக் ரோஷனும், 7-ஆவது இடத்தில் கியாரா அத்வானியும் உள்ளனர். இவர்களைத்தொடர்ந்து, 8-ஆவது இடத்தில் ஜூனியர் என்.டி.ஆர், 9-ஆவது இடத்தில் அல்லு அர்ஜூன், 10-ஆவது இடத்தில் கே.ஜி.எஃப் படத்தின் நாயகன் யஷ்  ஆகியோர் உள்ளனர். 

    விஜய்யின் வாரிசு திரைப்படத்தை முந்துகிறதா அஜித்தின் துணிவு? – வெளிவந்த ரிப்போர்ட்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....