Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்தமிழக அமைச்சரவையில் 10 அமைச்சர்களின் இலாகா மாற்றம்; முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

    தமிழக அமைச்சரவையில் 10 அமைச்சர்களின் இலாகா மாற்றம்; முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

    உதயநிதி ஸ்டாலின் புதிய அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், தமிழக அமைச்சரவையில் 10 அமைச்சர்களின் இலாகா மாற்றம் செய்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, சிறப்பு திட்ட அமலாக்கத்துறை வறுமை ஒழிப்பு திட்டம், ஊரகக் கடன்கள் ஆகிய இலாக்ககள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அமைச்சர் பெரிய கருப்பனுக்கு கூட்டுறவுத்துறை ஒதுக்கீடு. அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சித் துறை ஒதுக்கீடு. அமைச்சர் ராமச்சந்திரனுக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கீடு. வனத்துறை மதி.வேந்தனுக்கு ஒதுக்கீடு. இந்து சமய அறநிலை துறை சேகர் பாபுவிற்கு கூடுதலாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் காந்தியிடம் இருந்த காதி கிராமத்துறை இலாகா அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    சுற்றுச்சூழல் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாடு இலக்காவை வகித்து வந்த அமைச்சர் மெய்ய நாதனுக்கு சுற்றுச்சூழல் துறையுடன் முன்னாள் ராணுவ வீரர்கள் இலாகா கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது, என 10 அமைச்சர்களின் இலாக்கா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அமைச்சராக பதவி ஏற்றார் உதயநிதி ஸ்டாலின்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....