Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஉலகக் கோப்பை கால்பந்து; இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மெஸ்ஸி..

    உலகக் கோப்பை கால்பந்து; இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மெஸ்ஸி..

    குரோஷியாவை 3-0 என்ற கணக்கில் அர்ஜென்டினா இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. 

    கத்தாரில், நடப்பாண்டிற்கான கால்பந்து உலகக் கோப்பை போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. தலா 4 அணிகள் கொண்ட 8 பிரிவுகள் என மொத்தம் 32 அணிகளுடன் கடந்த நவம்பர் 20-ஆம் தேதி தொடங்கிய, இந்த கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் லீக் சுற்றுகள் அனைத்தும் முடிவடைந்தும், தற்போது அரையிறுதிச் சுற்றுகள் நடைபெறவுள்ளது. 

    இந்த உலகக் கோப்பை தொடரின் முதலில் குரூப் ஆட்டங்கள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து, நாக்-அவுட் சுற்றுகளும், காலிறுதியும் நடைபெற்றன. இந்நிலையில், தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி 12.30 மணியளவில் நடைபெற்றது. இதில், அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

    இந்த ஆட்டம் ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக சென்றது. ஆட்டத்தின் 33-ஆவது நிமிடத்தில், அர்ஜென்டினாவுக்கு பென்ல்டி வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தனது அணிக்கான கோலை அடித்தார், மெஸ்ஸி. இந்த கோல் மூலம் அர்ஜென்டினா முன்னிலை வகித்தது.

    இதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் 38-ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினா அணி வீரர் ஜூலியன் ஆல்வரெஜ் ஒரு கோல் அடிக்க, ஆட்டத்தில் முதல் பாதியில் அர்ஜென்டினா 2 – 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. 

    முதல் பாதியை மிஞ்சும் அளவுக்கு இரண்டாம் பாதி அமைய, ஆட்டத்தின் 68-ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் ஜூலியன் ஆல்வரெஜ் மீண்டும் ஒருகோல் அடித்தார். ஆட்டத்தின் முடிவில் 3-0 என்ற கணக்கில் அர்ஜென்டினா இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. 

    அரையிறுதியில் ஒரு கோல் கூட அடிக்காமல் குரோஷியா அணி கால்பந்து உலகக் கோப்பையை விட்டு வெளியேறியது. நாளை நடைபெறவுள்ள மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ அணிகள் விளையாடவுள்ளன. 

    விஜய்யின் வாரிசு திரைப்படத்தை முந்துகிறதா அஜித்தின் துணிவு? – வெளிவந்த ரிப்போர்ட்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....