Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஅரையிறுதிக்குச் சென்ற தமிழ் தலைவாஸ்.. வெற்றிப்பயணம் தொடருமா?

    அரையிறுதிக்குச் சென்ற தமிழ் தலைவாஸ்.. வெற்றிப்பயணம் தொடருமா?

    புரோ கபடி போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளது. 

    புரோ கபடி போட்டியின் 9-ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி தொடங்கிய இப்போட்டி டிசம்பர் 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

    இந்தத் தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்குபெற்றன. இந்த அணிகளில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின. அதன்படி, லீக் முடிவில் முதல் இரு இடங்களை ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகள் பிடித்தன. இதன் மூலம், இரு அணிகளும் நேரடியாக அரையிறுதிக்கு தகுதிப் பெற்றன. 

    இந்த அணிகளைத் தொடர்ந்து 3-வது இடத்தை பெங்களூரு புல்ஸூம், 4-வது இடத்தை உ.பி. யோதாஸும், 5-வது இடத்தை தமிழ் தலைவாசும், 6-வது இடத்தை நடப்பு சாம்பியன் தபாங் டெல்லியும் பிடித்தன. இந்த 4 அணிகளும் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் ஆட்டங்களில் விளையாடின. 

    இதில் தமிழ் தலைவாஸ் மற்றும் உ.பி யோதாஸ் அணிகள் மோதிய ஆட்டமானது மிகவும் விறுவிறுப்பாக சென்றது. இந்த இரு அணிகளும் மோதிய ‘எலிமினேட்டர்-1’ ஆட்டத்தின் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இரு அணிகளும் 36-36 என்ற புள்ளிகளை பெற்றன. இதனால் ஆட்டம் டை ஆனது. 

    எலிமினேட்டர் சுற்று என்பதால், வெற்றியாளரை தீர்மானிப்பதற்கான 5 ரெய்டு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன் முடிவில் தமிழ் தலைவாஸ் 6-4 என்ற புள்ளிகள் கணக்கில் அபாரமாக வென்று அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.

    நேற்று நடைபெற்ற ‘எலிமினேட்டர்-2’ ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் மற்றும் தபாங் டெல்லி அணிகள் மோதின. இவற்றில் 56-24 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் வென்று அரையிறுதிக்கு தகுதிப் பெற்றது. 

    இந்நிலையில, நாளை அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இவற்றுள் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பெங்களூர் புல்ஸ் அணியையும், தமிழ் தலைவாஸ் புனேரி பல்தான் அணியையும் எதிர்கொள்கிறது. 

    வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்: தொடக்கத்திலேயே சரியும் இந்திய வீரர்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....